தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். முதல் படமே லேடி சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கியதோடு, படத்தையும் வெற்றி படமாக வழங்கி இருந்தார் நெல்சன். இதன் மூலம் அவர் படங்கள் மீதான எதிர்பார்ப்பு உருவாக தொடங்கியது.

தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தான் டாக்டர். இப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ஹிட்டான நிலையில், தற்போது படத்தின் டிரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி டிரெய்லரை பார்க்கும்போது உடல் உறுப்பு திருட்டு, பெண் குழந்தைகள் கடத்தல் வியாபாரம் போன்றவற்றை மையப்படுத்தி கதைக்களம் அமைந்துள்ளதாக தெரிகிறது. யோகிபாபு, சிவகார்த்திகேயன் காமெடி நன்றாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. துப்பறிவாளன் படத்திற்கு பிறகு வினய் வில்லனாக இப்படத்தில் மிரட்டியுள்ளார்.

மற்றொருபுறம் சில நபர்களை சேர்த்து ஒரு கும்பலாக மாற்றி குழந்தைகளை திருடி கிட்னி திருடும் கும்பலுக்கு தலைவன் போல் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் உள்ளது. எனவே, இப்படத்தில் அவர் நல்லவரா கெட்டவரா என்பது படத்தை பார்த்த பின்னரே தெரிய வரும். ரசிகர்கள் அனைவருக்குமே ஓரளவிற்கு பாசிட்டிவ் கமெண்டுகளையே பதிவிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் ரசிகர்களை விட விஜய் ரசிகர்கள் தான் டாக்டர் படத்தின் டிரைலருக்காக மரண வெயிட்டிங்கில் இருந்தனர். காரணம் தற்போது விஜய் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருவதே. டாக்டர் படம் எப்படி இருக்கிறதோ அதை வைத்தே பீஸ்ட் படத்தையும் ரசிகர்கள் எடை போட்டு வருகிறார்கள். அந்த வகையில் டாக்டர் படத்தின் டிரைலர் நல்ல விமர்சனங்களையே பெற்றுள்ளது.