டாக்டர் படத்துடன் மோதிய விஜய் சேதுபதி.. தோல்விக்கு என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி. இவர்கள் இருவருக்குமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ஹீரோ திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதேபோல்தான் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி மற்றும் லாபம் உட்பட அனைத்து படங்களும் வசூல் ரீதியாக பெரிய தோல்வி அடைந்தன. இதனால் இருவரும் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான டாக்டர் படத்தை சமீபத்தில் படக்குழுவினர் திரையரங்கில் வெளியிட்டனர். பெரிய திரையரங்கு முதல் சிறிய திரையரங்கு வரை அனைத்து திரையரங்கிலும் டாக்டர் படம் வெளியானது. இதனால் டாக்டர் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.

அதேபோல் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் சிரிஜா நடிப்பில் உருவான முகில் படமும் வெளியாகி உள்ளது. ஆனால் இப்படத்திற்கு சிறிய திரையரங்குகள் கிடைக்கவில்லை பெரிய திரையரங்குகளில் மட்டும் வெளியானது. முகில் படத்தைவிட டாக்டர் படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இதற்கு பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வருகின்றனர்.

அதாவது டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தற்போது பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இதனால் நெல்சனின் இயக்கத்தை பார்ப்பதற்காகவே டாக்டர் படத்தை அதிகமாக தளபதி ரசிகர்கள்தான் பார்த்துள்ளனர். அதற்கு காரணம் இப்படத்தின் வெற்றியை பொருத்து தான் தளபதி படத்தின் வெற்றியும் இருக்கும் என அனைவரும் நினைத்தனர். இதுவே டாக்டர் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

விஜய் சேதுபதி நடிப்பில் முகில் படம் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்யாததால் தான் படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என கூறி வருகின்றனர். மேலும் படம் வெறும் 1 மணி நேரம் தான் என்பதால் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்க வில்லை எனக் கூறி வருகின்றனர். எப்படிப்பார்த்தாலும் இரண்டு படங்களுக்கு மீதான வரவேற்பு குறைவு தான் என பொதுவான கருத்தை பல ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

AllEscort