டாக்டர் படத்தில் யோகிபாபுவை ஓவர்டேக் செய்த காமெடியன்.. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா சாமி

நம்ம தமிழ் சினிமால கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு போன்ற காமெடி நடிகர்களுக்கு அப்பறம் மிகப்பெரிய இடைவெளி விழுந்துருச்சுனு தான் சொல்லனும். ஏன்னா இவங்களுக்கு அப்பறம் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் உண்டாகிருச்சு. ஓரளவுக்கு இவங்க இடத்தை நிரப்புனது நம்ம சந்தானம் மட்டும் தான். ஆனா அவரும் இப்போ ஹீரோவா களமிறங்கிட்டாரு.

என்னதான் சூரி, கருணாகரன், சதீஷ் என காமெடி நடிகர்கள் இருந்தாலும் இவர்களால் அந்த அளவிற்கு ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை. அந்த சமயத்தில் தான் நடிகர் யோகி பாபு என்ட்ரி கொடுத்தார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து ரொம்ப ஷார்ட் டைம்லயே ரசிகர்கள் மனசுல இடம் பிடிச்சுட்டாரு.

யோகி பாபுவோட டைமிங் காமெடி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்த பல முன்னணி நடிகர்களின் படங்களில் யோகி பாபு நடிக்க தொடங்கினார். சீக்கிரமே அனைவரையும் பின்னுக்கு தள்ளி சட்டுனு டாப்புக்கு போயிட்டாரு. இனிமே இவர் தான் காமெடி கிங்குனு நினைச்சிட்டு இருக்கும் இந்த சமயத்துல புதுசா ஒருத்தர் என்ட்ரி கொடுத்திருக்காரு.

யாருனு தான கேட்கறீங்க. அதாங்க டாக்டர் படத்துல நம்ம எல்லாரையும் வயிறு குலுங்க சிரிக்க வைச்சாரே அந்த காமெடி நடிகர் தான். அவர் வேற யாரும் இல்லைங்க இதுவரை யாராலும் கவனிக்கப்படாத காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தான். சமீபத்தில் கூட நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.

தற்போது டாக்டர் படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார். இருப்பினும் யோகியைவிட ரெடின் கிங்ஸ்லியின் காமெடி தான் சிறப்பாக இருப்பதாக அனைவரும் பாராட்டி வருகிறார்கள். படம் முழுக்க இவர் தான் ரசிகர்களை சிரிக்க வைக்கிறாராம். அந்த அளவிற்கு இவரது காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரெடின் பல படங்களில் நடித்திருந்தாலும், இதுவரை இவரின் காமெடியை நம் ரசிகர்கள் ரசிக்க தவறிவிட்டார்கள் போல. தற்போது டாக்டர் படத்தில் தான் அனைவரது கவனமும் இவர் பக்கம் திரும்பி உள்ளது. அந்த அளவிற்கு இவரின் நடிப்பும் அற்புதமாக இருப்பதாக மக்கள் கூறி வருகிறார்கள். எப்படியோ நம்ம தமிழ் சினிமாவுக்கு அடுத்த காமெடியன் தயார்.