கொரோனா நோய் பரவல் தாக்கத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் பல மாதங்களாக இயங்காமல் இருந்தது. தற்போது சில விதிமுறைகளை பின்பற்றி அனைத்து தியேட்டர்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து திரைப்படம் பார்த்து செல்கின்றனர்.

அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை பிரியங்கா அருள் மோகன் இணைந்த நடிப்பில், இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில், நெல்சன் அவர்களின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டாக்டர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பொதுவாக வார இறுதி நாட்களான நாட்களான சனி, ஞாயிறு போன்ற நாட்களில் மக்கள் குடும்பத்துடன் வந்து தியேட்டரில் திரைப்படம் பார்த்துச் செல்வர். ஆனால் இந்த திரைப்படத்திற்கு திங்களன்று கூட நல்ல வசூல் கிடைத்துள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் டாக்டர் திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது.

டாக்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து இதர திரைப்பிரபலங்கள் நடித்துவரும் திரைப்படத்திற்கும் இதேபோன்று மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது. டாக்டர் திரைப்படம் வெளியாகி சில நாட்களே ஆன நிலையில் 25 கோடி ரூபாய் வசூலை எட்டி விட்டதாம்.

இதனால் திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரசிகர்களும் டாக்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்த திரைப்படத்திற்கு ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது நகைச்சுவை திறமையை முழுவதுமாக பயன்படுத்தவில்லை என்ற கருத்து பல தரப்பினரால் எழுப்பப்பட்டு வருகிறது.

இது போன்ற பல்வேறு கிசுகிசுக்களுக்கு இடையில் இத்திரைப்படம் ஈட்டிய வசூல் கோலிவுட் வட்டாரத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் சம்பளம் உயரக்கூடலாம் என்று பலரும் கூறி வருகின்றனர்.