டாக்டர் சொல்லியும் கேட்காத எம்ஜிஆர், ஜெயலலிதா.. இறப்புக்கு காரணமான இரண்டு கொடிய சாப்பாடு

ஒரு சில பழக்கங்கள் நம்முடைய வாழ்க்கையையே மாற்றும் திறன் கொண்டவை. நல்ல பழக்கங்கள் ஒரு மனிதனை உருவாக்குவது போல சில பழக்கங்கள் நம்மை அழித்தும் விடுகின்றன. அது நம்முடைய உணவு பழக்கங்களாகவும் இருக்கக்கூடும்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்ரை மக்களால் எளிதில் மறந்திட முடியாது. படங்களில் நடிக்க தொடங்கி, மக்களிடம் தனக்கென அழியாத இடத்தை பிடித்து இருப்பவர். 1960களில் தீவிர அரசியலில் இறங்கி, தி.மு.கழகத்தை ஆட்சி கட்டிலில் அமர்ந்து முக்கிய பங்காற்றினார் . பின்னர் அ.தி.மு.காவை 1972இல் தொடங்கி தனியாக ஆட்சி அமைத்து பின்னர் தான் இறக்கும் வரை முதல்வராக இருந்து மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியிருந்தார்.

அசைவ பிரியரான நடிகர் எம்.ஜி.ஆர். எப்போதும் மீன் மற்றும் கருவாடு உணவுகளை விரும்பி சாப்பிடுவார். ஆனால், தொண்டையில் குண்டு பாய்ந்த பின் உடலில் பல மாற்றங்கள் அவருக்கு உருவாக தொடங்கின. அவருக்கு பின்நாளில் இருதய பாதிப்பு ஏற்பட்ட பின் அவரை டாக்டர்கள் மீன் போன்ற உணவுகளை சாப்பிட மறுப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் அதனை பின்பற்றாமல் இருந்த எம்.ஜி.ஆர். இருதய பாதிப்பிற்கே தன்னுடைய இன்னுயிரை பறி கொடுத்தார்.

அதிமுகவை எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஜெயலலிதா கட்சியினை வழிநடத்தி வந்தவர். நடிப்பதில் தொடங்கி எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்து பெரும் புகழை அடைந்தார். சினிமாவில் கொடிக்கட்டி பறந்த இவர், எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய பின் சிறு சிறு பிரச்சாரங்கள் என தொடங்கி பின்நாளில் அவருக்கு அடுத்து பின்னர் முதலமைச்சராகவும் இருந்தார்.

எப்போதும் சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை இவர் விரும்பி சாப்பிடக்கூடியவர். அறிமுகமான போது ஒல்லியாக இருந்தவர், தன்னுடைய உணவு பழக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடல் கூட தொடங்கினார். அரசியலுக்கு வந்த பின் இவருக்கு உடல் பருமன் கூடவும் இது காரணமாகி போனது. பின்நாளில் இதுவே அவரது உயிரை பறித்தது.

தமிழக அரசியலில் முக்கிய இடங்களில் இருந்த இவர், தமிழக மக்களுக்கு பல நன்மைகளை செய்திருந்தனர். சில உணவு கட்டுப்பாட்டுகள் இருவரும் கொண்டிருந்ததால் இருவரும் இன்னமும் சில ஆண்டுகள் இருந்திருந்து இன்னமும் பல நன்மைகள் செய்திருக்க கூடும்.