டாக்டர் சாட்டிலைட் உரிமையை வாங்கிய பிரபல டிவி.. கோடியில் வாங்குறதுக்கு இவங்கதான் சரி

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது. இதனால் தற்போது படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதற்காக தற்போது படக்குழுவினர் அனைத்து தொலைக்காட்சிகளிலும் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் படத்தினைப் பற்றிய ப்ரமோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

தற்போது சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதால் கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என கூறி வருகின்றனர். இப்படத்தின் மொத்த பட்ஜெட் 55 கோடி ஆனால் இறுதியாக 45 கோடி முடிவு செய்து படத்தை முடித்துள்ளனர்.

டாக்டர் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்குவதற்கு பல தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டியிட்டனர். ஆனால் இறுதியாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் சாட்டிலைட் உரிமையை 9 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் அனைத்துமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கும் என கூறிவருகின்றனர்.

இப்படத்தினை வருகிற தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். அதனால் சிவகார்த்திகேயன் தற்போது அடுத்த படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படமும் முடிவடைந்துள்ளது. அதனால் இப்படமும் கூடிய விரைவில் வெளியாகும் என கூறிவருகின்றனர்.

தனுஷ் நடித்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.. தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்

தமிழ் சினிமாவில் நடிகர் கதிர் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே ஒரு சிறந்த இயக்குனராக தன்னை ...