டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 5 படங்கள்.. கமலை மிஞ்சிய ஜெயராம்

நமக்கு பிடித்த ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது என்றாலே ஆரவாரத்துடன் இருப்போம். அதிலும் இரண்டு ஹீரோக்கள் சப்ஜெக்ட் என்றால் அது மிகப்பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன 5 படங்களை தற்போது பார்க்கலாம்.

விக்ரம் வேதா : இரட்டை இயக்குனர் புஷ்பா, காயத்ரி இயக்கத்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. மேலும் இப்படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் வெளியாகியிருந்தது. இதில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும், விஜய்சேதுபதி தாதாவாகவும் நடித்திருந்தனர். இப்படம் வித்தியாசமான மற்றும் விருவிருப்பான கதைக்களத்துடன் அமைந்திருந்தது.

தளபதி : மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் தளபதி. மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தற்போதும் நண்பர்கள் தினம் வந்தால் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

பிரண்ட்ஸ் : நேருக்கு நேர் படத்திற்குப் பிறகு விஜய், சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இப்படத்திற்கு வடிவேலுவின் காமெடி ப்ளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது. இப்படமும் நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தோழா : நாகர்ஜுனா, கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தோழா. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கியிருந்தார். இப்படத்தில் கை, கால் செயலிழந்த நாகார்ஜுனாவை கார்த்தி பார்த்துக் கொள்கிறார். இவர்களுக்கிடையே உன்னதமான சகோதர பாசம் தெரிந்தது.

தெனாலி : கமலஹாசன், ஜெயராம், ஜோதிகா, தேவயானி மற்றும் பலர் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெனாலி. இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தில் கமலஹாசனின் நடிப்பையே மிஞ்சி இருந்தார் ஜெயராம்.