டபுள் டிராக் ஓட்டும் அப்பா, கனவிலே காதலிக்கும் மகன்.. கோபி சார் கிட்ட கத்துக்கோங்க எழில்

சின்னத்திரை சீரியல்களுக்கு எல்லாம் கடும் போட்டியாக மாறிவரும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் மக்கள் மத்தியிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த சீரியல் துவங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆதரவு கிடைக்காவிட்டாலும் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியலாக மாறிவிட்டது.

ஏனென்றால் சீரியலின் கதாநாயகி பாக்கியலட்சுமியின் கணவர் கோபி செய்யும் காதல் லீலை இளசுகளுக்கு சவால் விடும் அளவுக்கு உள்ளது. அத்துடன் கோபி பற்றிய முழு விவரமும் கோபியின் கல்லூரிக் காதலி ராதிகாவிற்கு தெரிந்துவிட, அதன்பிறகும் உருக உருக பேசி ராதிகாவை மயக்கி விட்டார்.

தற்போது கோபி ராதிகா உடன் சேர்ந்து வாழ்வதற்காக, மனைவி பாக்கியாவையே கழட்டிவிட சதித் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். இது ஒருபுறமிருக்க கோபியின் இளையமகன் எழில் தன்னுடைய காதலியான அமிர்தாவிடம் காதலை சொல்ல முடியாமல் கனவிலேயே காதல் டிராக் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆகையால் எழில் மற்றும் அமிர்தா இருவருக்குமிடையே இருக்கும் காதலை இருவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்ளாமல் கடந்த சில மாதங்களாகவே பாக்கியலட்சுமி சீரியலின் கதை களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

இருப்பினும் பாக்கியலட்சுமி சீரியலில்,  அப்பா இரண்டு பேரை ஒரே சமயத்தில் சமாளிக்கும் போது மகன் காதலை கூட சொல்ல தைரியம் இல்லையா! என்று நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர்.