ஜோதிகா வாய்ப்பை தட்டிப்பறித்த அனுஷ்கா.. இதெல்லாம் அந்தம்மாக்கு முன்னாடியே நான் செஞ்சிட்டேன்

நடிகை அனுஷ்கா செட்டி நடிப்பது மட்டுமின்றி யோகா கலைகளிலும் மிகவும் சிறந்து விளங்குபவர். இவர் யோகாவில் பரத் தாகூரிடம் தீட்சை பெற்று யோகாவை பயிற்றுவிக்கும் பயிற்சி ஆசிரியராகவும் இருந்தார்.

திரைப்படத்துறையில் சூப்பர் என்னும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்னர் மாதவனுடன் இணைந்து 2 என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழில் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். 40 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அனுஷ்கா.

அருந்ததி திரைப்படம் அனுஷ்காவிற்கு மிக அதிகமான புகழையும் ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பையும் பெற்று தந்தது. அதை தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.

39 வயதாகும் அனுஷ்காவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை அவரிடம் திருமணம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, என்னுடைய கணவர் என் விருப்பப்படிதான் அமைவார் ஆனால் எப்போது என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

தற்போது சந்திரமுகி 2 திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாக ஓராண்டுக்கு முன்பாகவே ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். இயக்குநர் பி .வாசுவின் இயக்கத்தில் தான் இந்த திரைப்படமும் உருவாக உள்ளது. இதில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. சந்திரமுகி-2 திரைப்படம் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால், அனுஷ்காவுக்கு இது அல்வா சாப்பிடுவது போல் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஏன் என்றால் ஜோதிகாவுக்கு முன்னாடியே அருந்ததி படத்தில் அனுஷ்கா இதுபோல நடித்துவிட்டார்.