ஜோதிகாவிற்கு கதை கூற முடியாமல் தவிக்கும் இயக்குனர்.. எனக்கு ஒரு சான்ஸ் குடுங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதன்பிறகு சூர்யா மேல் காதல் கொள்ள இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்பு பெரிய அளவில் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்தார்.

ஆனால் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தற்போது வரை ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உடன்பிறப்பே திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜோதிகா மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். உடன்பிறப்பே படத்தை அமேசான் தளத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ஜோதிகா அதிகமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் பல இயக்குனர்களும் ஜோதிகா வைத்து படங்கள் இயக்குவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் ஜோதிகா ஒரு சில இயக்குனர்களிடம் மட்டும் படத்தின் கதையை கேட்டுவிட்டு நடிக்க சம்மதித்துள்ளார்.

ஜோதிகாவிடம் கதையைக் கூற இயக்குனர் தினேஷ் செல்வராஜ் என்பவர் தொடர்ந்து பலமுறை முயற்சி செய்துள்ளார். ஆனால் தற்போது வரை ஜோதிகாவை பார்த்து நேரடியாக கதை கூற முடியவில்லை. ஏனென்றால் ஜோதிகா தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்து முடித்த பிறகு மீண்டும் தமிழில் நடிப்பார் அப்போது இயக்குனரை வாருங்கள் என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் இயக்குனர் ஜோதிகா நண்பர்களிடம் படத்தின் கதையையும் ஜோதிகாவின் கதாபாத்திரத்தையும் பற்றி கூற இது கண்டிப்பாக ஜோதிகாவிற்கு சரியாக இருக்கும். அவர் வந்தவுடன் இந்த கதையை பற்றி கூறுகிறேன். ஒருநாள் நேரில் சந்தித்து நீங்களும் அந்த கதையை கூறுங்கள் எனக் கூறியுள்ளனர். இதனால் கூடிய விரைவில் ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.