ஜேம்ஸ் பாண்ட் பட சாயலில் இருக்கும் பீஸ்ட்.. வெளிப்படையாக சுவாரசியங்களை கூறிய நெல்சன்

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வருகிற 13ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் பீஸ்ட். மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இந்தப்படத்தின் முன்பதிவு திரையரங்குகளில் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் தற்போது பேசியுள்ளார் இயக்குனர் நெல்சன். அவர் பேசுகையில், பீஸ்ட் படம் ஒரு பக்காவான ஆக்ஷன் திரைப்படம். படத்தின் கதை என்ன என்பதை டிரெய்லரில் கூறப்பட்டுள்ளது. நிறைய சண்டை காட்சிகள் இருக்கும். விஜயின் மற்ற படங்கள் போல் இல்லாமல் இது வேறு சாயலில் இருக்கும் என கூறுகிறார் நெல்சன்.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்கள் டார்க்-கியூமர் அடிப்படையில் எடுக்கப்பட்ட படங்கள். சண்டை காட்சிகள் இருந்தும் காமெடிக்கு நிறைய முக்கியத்துவம் கொண்ட படங்கள் அவை. பீஸ்டும் அப்படித்தானா என்றதற்கு, பீஸ்ட் படம் என்னுடைய முந்தைய படங்களின் சாயலில் இருக்காது. இது 60 சதவீதம் விஜய் சார் படமாகவும், 40 சதவீதம் என்னுடைய படமாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

ஜேம்ஸ் பாண்ட் படங்களால் இடம்பெறும் சண்டை காட்சிகள் போலவே இந்த படத்தில் நிறைய சண்டை காட்சிகள் இருக்கும். அவை அனைத்திலும் விஜய் புகுந்து அதோகலம் செய்துள்ளதாக நெல்சன் கூறியுள்ளார். இந்த படத்தில் ஹீரோ இன்ட்ரோ சாங் என்பதெல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க கதைக்கு முக்கியத்துவம் கொண்டே எடுக்கப்பட்டுள்ளதாக கூறி முடிக்கிறார் நெல்சன்.

இந்தப்படத்தில் இருந்து வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் பெறும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி இன்னும் எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக முறை பார்க்கப்பட்ட தென்னிந்திய படத்தின் டிரெய்லர் என்னும் பெருமையை இது பெற்றுள்ளது.

விஜயுடன் செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து, நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் சார்பாக தயாநிதி மாறன் தயாரித்துள்ளார். பீஸ்ட் படம் தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளிவரவுள்ளது.