ஜெய் பீம் பட திரை விமர்சனம்.. போலிசை மொத்தமாக வச்சி செய்த சூர்யா

சில படங்களை, பாடம் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி பட்ட படைப்பு தான்  ‘ஜெய் பீம்’ . கமெர்ஷியல் அம்சங்களை குறைத்து, யதாரத்தை மக்களுக்கு புரிய வைக்கும் முயற்சி. நம்மை சுற்றி என்ன நடக்கிறது, இது போன்ற சூழலில் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என டெம்ப்லேட் போட்டு காட்டியுள்ளார் இயக்குனர் ஞானவேல்.

வெற்றிமாறனின் விசாரணை, அசுரன், விருமாண்டியின் க/பெ ரணசிங்கம் வரிசையில் இப்படத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். சூர்யா இப்படத்தை தயாரித்து, நடித்ததற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

கதை – கேஸ் முடிக்க வேண்டும் என அழுத்தம், அப்பாவி ஒருவரை பிரேம் செய்ய நினைக்கிறது போலீஸ். தன் கணவனின் நிலை அறிய சென்னையில் உள்ள வக்கீலின் உதவியியை நாடுகிறார் ஹீரோயின்.

ஒரு புறம் போலீஸ் சொல்லும் பொய்கள், சூர்யா சேகரிக்கும் ஆதாரம், அரசு வக்கீல் செய்யும் தில்லாங்கடி என இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ஜானரில் படம் செல்கிறது.

இறுதியில் போலீஸ் ஸ்டேஷன் ஆசாமிகள் செய்த டபிள் க்ராஸ் சமாச்சாரம், அப்பாவி மக்களுக்கு கிடைக்கப்பட்ட நீதி என முடிகிறது படம்.

சினிமாபேட்டை அலசல்– உண்மை சம்பவத்தை ஸ்க்ரிப்ட் ஆக்கிய விதத்திற்கு இயக்குனருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். நடிகர், நடிகையர் தேர்வு, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்துமே பிளஸ். எமோஷனல் பயணமாகவே இப்படம் அமைந்துள்ளது. எனினும் குழந்தைகள் மற்றும் மனம் பலவீனம் ஆனவர்கள் படம் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

சினிமாபேட்டை வெர்டிக்ட்– இது போன்ற யதார்த்த சினிமா மோலிவுட்டில் தான் நாம் அதிகம் பார்த்துள்ளம். திரையரங்கில் ரிலீஸ் செய்து வசூல் வேட்டை செய்வது படக்குழுவின் நோக்கம் அல்ல என்பது நிஜம். இப்படம் பல விருதுகளை தட்டி செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, எனினும் படம் பார்ப்பவர்களின் மனதில் சக மனிதனை, மனிதனாய் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும்  விதைக்கும் என்பதும் நிஜம்.

சினிமாபேட்டை ரேட்டிங்: 3.5/5