ஜீ தமிழ் சீரியல் நடிகையை தொக்கா தூக்கிய பிக் பாஸ்.. டிஆர்பி-க்கு வச்ச ஆப்பு.!

சின்னத்திரை சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான கதாபாத்திரம் தான் அகிலாண்டேஸ்வரி. 90களில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருந்த நடிகை ப்ரியாராமன் தான் செம்பருத்தி சீரியல் அகிலாண்டேஸ்வரி ஆக நடித்துக்கொண்டிருக்கிறார். இதில் இவர் தனது கம்பீரமான நடிப்பால் எக்கச்சக்கமான ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார்.

அத்துடன் இந்த சீரியலில் இவருடைய காஸ்ட்யூமை பல ரசிகைகள் ஆர்வத்துடன் பின்பற்றுவதும் உண்டு. கடந்த 2017-ம் ஆண்டு துவங்கப்பட்ட செம்பருத்தி சீரியல் தற்போது வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. மேலும் பிரியாராமன் சக நடிகரான ரஞ்சித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரஞ்சித் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் ரஞ்சித்தின் முதல் மனைவி அருணா இறந்து விடுவார். அந்த அருணா கதாபாத்திரத்தில் ப்ரியாராமன் தற்போது ஆவியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இன்னிலையில் செம்பருத்தி சீரியலில் கடந்த சில நாட்களாகவே அகிலாண்டேஸ்வரியை காண்பிப்பதில்லை. ஏனென்றால் அவர் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளாராம். அத்துடன் அவர் பிக்பாஸ் சீசன் 5ல் பங்கேற்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே செம்பருத்தி சீரியலில் கதாநாயகனாக ஆதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த கார்த்திக் விலகியது ரசிகர்கள் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அகிலாண்டேஸ்வரி செம்பருத்தி சீரியல் இருந்த சென்றுவிட்டால் அந்த சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மை.

மற்றொருபுறம் பிக் பாஸ் சீசன் 5வில் ஏற்கனவே சந்தோஷ் பிரதாப், பிரதைனி சர்வா, கோபிநாத் ரவி, பவானி ரெட்டி, சூசன் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பிரியா ராமனும் கலந்து கொள்ள உள்ளார் என்பதை கேட்டதும் பிக்பாஸ் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்

செல்வராகவனுக்கு சவால் விட்ட நடிகை.. விவாகரத்துக்குப் பின் வெளிப்படையாக பேசிய சோனியா அகர்வால்

கடந்த 2003ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால், இவர் மற்ற நடிகைகளை காட்டிலும் தன்னுடைய நிதானமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தன்னுடைய முதல் படத்திலேயே ...
AllEscort