ஜீவானம்சத்தை உதறித் தள்ளிய சமந்தா.. விவாகரத்துக்கு பின் கோடிகளில் புரளும் அம்மணி

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அதுமட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாம் இடத்தை சமந்தா பிடித்துள்ளார். அதுவும் ஏராளமான பட வாய்ப்புகளும் தற்போது சமந்தாவுக்கு வரிசைகட்டி நிற்கிறது.

இந்நிலையில் சமந்தா, நடிகர் நாகசைதன்யாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் கடந்த 2021ல் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இவர்களது விவாகரத்திற்கு என்ன காரணம் என்பது தற்போது வரை தெரியவில்லை.

மேலும் சமந்தா திருமணத்திற்குப் பிறகு மிக கவர்ச்சியாக நடித்தனால் தான் இவர்களுக்குள் விவாகரத்து ஆனது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்திலும் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சமந்தாவின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. சமந்தா கடந்த 2010ஆம் ஆண்டு தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 65 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவருடைய முழு சொத்து மதிப்பு 84 கோடி ஆகும்.

மேலும் சமந்தா கார் பிராண்டுகளில் பி எம் டபுல்யு  3 சீரிஸ், பி எம் டபுல்யு  எக்ஸ்5 மற்றும் ஜாகுவார் எக்ஸ் எப் ஆர் ஆகிய விலையுயர்ந்த கார்களை வைத்துள்ளார். சமந்தா, மேலும் பல நிறுவனங்களில் முதலீடுகளும் செய்துள்ளார். தற்போது சமந்தா மும்பையில் ஒரு வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆக போகிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

ஆனால் சமந்தாவுடன் திரை வாழ்க்கையைத் தொடங்கிய நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு 38 கோடிதானாம். நாக சைதன்யாவுடன் இரண்டு மடங்குக்கு மேலாக சொத்துக்கள் வைத்து உள்ளார் சமந்தா. இதனால்தான் சமந்தா விவாகரத்துக்குப் பிறகு தனக்கு ஜீவனாம்சம் வேண்டாம் என கூறியுள்ளார்.