ஜிம் ஒர்க் அவுட் செய்து மிருகத்தனமாக உடம்பை ஏற்றியுள்ள டாப்ஸி.. மிரட்டலான புகைப்படம்

தனுஷுடன் ஆடுகளம் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான டாப்ஸி. தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்காவிட்டாலும் தனக்கான உள்ள கதாபாத்திரத்தை திறமையாக தேர்வு செய்து வருகிறார்.

அஜித் நடிப்பில் வெளிவந்த ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. ராஷ்மி ராக்கெட் என்ற படத்திற்காக ஹீரோக்களை ஆச்சரியப்படும் அளவிற்கு வெறித்தனமாக உடம்பை ஏற்றி உள்ளார்.

இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த படத்தில் விளையாட்டு வீராங்கனையாக டாப்சி நடித்துள்ளார்.

அமேசான் பிரைமில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தனது படத்திற்காக நடிகர்கள் தான் உருவ மாற்றம் செய்வார்கள் ஆனால் டாப்ஸி போன்ற ஹீரோயின்கள் இதுபோன்ற ரிஸ்க் எடுப்பதை விரல் விட்டு எண்ணி விடலாம்.

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இது போன்ற கதாபாத்திரம் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பல மொழிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் டாப்ஸி தமிழில் ஜன கன மன, ஏலியன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

என்ன நடக்குது இங்க வெண்பாவை புலம்ப விட்ட கண்ணம்மா.. தலைச்சுற்றி போன பாரதி வீடியோ

கடந்த சில நாட்களாகவே பாரதி கண்ணம்மா ஹீரோயின் ரோஷினி சீரியலை விட்டு விலகும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு சற்று முன் வெளியான பாரதிகண்ணம்மா ப்ரோமோ சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. கண்ணம்மாவின் ...