ஜாதி படத்தை வைத்து விருது வாங்கும் இயக்குனர்கள்.. வாய்விட்டு மாட்டிய பிரபலம்

சின்ன கவுண்டர் என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் ஆர் வி உதயகுமார். இவர் சமீபத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அதில் அவர் கூறிய கருத்துக்கள் தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

அவர் கூறியிருப்பதாவது மக்கள் அனைவரும் தற்போது ஜாதியை பற்றி பேசுவதை மறந்து விட்டனர். ஆனால் தமிழ் சினிமாவில் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுப்பது போல் சில இயக்குனர்கள் ஜாதியை பற்றி பேசி படம் எடுக்கின்றனர் என்றும், இதற்காக தேசிய விருது வேறு கொடுக்கிறார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

அவருடைய இந்த விமர்சனம் தற்போது  ரசிகர்கள் பலரையும் கடுப்பேற்றி உள்ளது. இவ்வளவு பேசும் இயக்குனர் அவரின் சின்ன கவுண்டர் மற்றும் எஜமான் திரைப்படத்தில் மேல் ஜாதியைப் பற்றி காட்டியிருப்பார்.

இதில் எஜமான் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடந்து செல்லும் பொழுது அவருடைய காலடி மண்ணை எடுத்து மக்கள் நெற்றியில் வைப்பது போன்ற காட்சி இருக்கும். இதில் சாதிய உணர்வு இல்லையா என்றும் விழிப்புணர்வுக்காக நீங்கள் படம் எடுத்தீர்களா என்றும் ரசிகர்கள் இயக்குனரை திட்டித் தீர்க்கின்றனர்.

கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் மக்களிடையே வரவேற்பு பெற்றதற்கு காரணம் படத்தின் தரம் மட்டுமே, சாதி அல்ல என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.