சோசியல் மீடியாவில் ரகளை பண்ணும் மைனா நந்தினி.. ஒரே பதிவுதான்! பொறாமையில் நடிகைகள்

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய சீசன்களை வெற்றிகரமாக கடந்த சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலின் மூலம்தான் நடிகை நந்தினி பிரபலமானார். மைனா என்ற கதாபாத்திரத்தில் நடிகை நந்தினி நடித்ததால் மைனா நந்தினி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இந்த சீரியலை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், வெவ்வேறு நாடகத்திலும் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

சின்னத்திரை மட்டுமன்றி அவ்வப்போது வெள்ளித்திரையிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் இவரை பார்த்திருப்போம். வலைத்தளங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி நாளுக்குநாள் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருப்பார்.

ரசிகர்கள் இவரது மகனுக்கென தனி இன்ஸ்டாகிராம் ஐடி கிரியேட் செய்து அதில் இவரது மகனின் புகைப்படத்தை பதிவிட்டுக்கொண்டே வரும்படி வலியுறுத்தி வருகின்றனராம். மேலும் மைனா நந்தினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது ரசிகர்கள் இவரை பாலோவ் செய்து வருகின்றனர். இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டும், கமெண்ட் செய்யப்பட்டும் அதேசமயம் ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

தற்போது இன்ஸ்டாகிராமில் இவரை பின் தொடரக் கூடிய ரசிகர் பட்டாளமானது 2 மில்லியனை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.இதனால் ஆனந்தமடைந்த மைனா நந்தினி ‘2M மைனா நந்தினி’ என்று கேக் வெட்டி தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கும் வழக்கம்போல் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. பல நடிகைகளுக்கே இவளோ பின்தொடர்பாளர்கள் இல்லையாம். இதனால் சில நடிகைகளே பொறாமை படுகிறார்களாம். தற்போது மைனா நந்தினி, நடிகர் கமலஹாசன் நடித்து வரும் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறாராம். அத்துடன் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த திரைப்படத்தில் ஏற்கனவே விஜே மகேஸ்வரியும், நடிகை ஷிவானியும் ஜோடியாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்திலாவது மைனா நந்தினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.