சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் சிங் ஜோடி.. தலைசுற்ற வைக்கும் 9500 சதுர அடி பங்களாவின் விலை!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும், உச்ச நட்சத்திரங்களுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்து பிரபலமான நடிகை தீபிகா படுகோனே. இவர் கோலிவுட்டின் பிரபல நடிகரான ரன்வீர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்கள் இருவரும், ஒரு சொகுசு பங்களாவை வாங்கியுள்ளனர் என்று தகவல்கள் பரவி வருகிறது.

பிரபல நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் சீங் இணைந்து வாங்கியுள்ள புதிய பங்களா சுமார் 22 கோடி இருக்கும் என பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமின்றி, இந்த பங்களா மும்பைக்கு அருகில் இருக்கிறதாம்.

நடிகை படுகோனே தனது 17 வயதில் திரைத்துறைக்குள் வந்தவர். இவரது முதல் படம் ‘ஐஸ்வர்யா’ இந்த படத்தை பின் தொடர்ந்து இவர் பல படம் நடித்தார். சென்னை எக்ஸ்பிரஸ், பஜினொவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் ஹிட் கொடுத்து அவரை பிரபலமாக்கியது.

தனது அசத்தலான நடிப்பினால், அனைவரையும் கவர்ந்தவர் தீபிகா படுகோன். வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து உலக அளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். நடிப்பிற்கு மட்டுமல்ல அவர் உடுத்தும் உடைகளும் அதனை அவர் உடுத்திக்கொள்ளும் விதத்திற்கும் கூட ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் அந்த வரிசையில் எளிமையான உடைகளை அணிவதால் அவரை ‘சிம்பிளிசிட்டி குயின்’ என்றும் கூறுகின்றனர்.

இவர் ஒரு படத்தில் நடிக்க 10 முதல் 12 கோடி சம்பளம் வாங்குகிறார். அதுமட்டுமின்றி இவருக்கு சுமார் 600 கோடி மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுமட்டுமின்றி, சென்ற மாதம் இவர் பெங்களூரில் நான்கு படுக்கை அறைகளைக் கொண்ட ஒரு லக்சுறியஸ் அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளார். அதற்காக  இவர்கள் பதிவு துறை அலுவலகத்திற்கு செல்லும் போது எடுத்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் கசிந்து வைரலாகி வருகின்றன.

தற்போது இவர் மும்பை அருகே வாங்கி உள்ள பங்களா 5 படுக்கை அறைகளை உடையதாகவும்  சுமார் 22 கோடி ஆகவும், 9500சதுர அடிகளைக் கொண்டதாகவும் இருக்கிறதாம். இவர் எஸ்டேட் நிறுவனங்கள் அளித்த தகவலின் படி இவர்கள் நிறுவனங்களின் வருமானத்தில் இருந்து தான் இந்த பங்களாவை வாங்கி இருப்பதாக கூறப்படுகின்றன.

நடிகை தீபிகா படுகோன் ஆவின் எண்டர்பிரைசஸ் எல்எல்பி மற்றும் நடிகர் ரன்வீரின் ஆர்எஸ் வேர்ல்ட்வைட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியின் மூலம் வந்த ப்ராபிட்டில் தான் இவர்கள் இந்த சொத்தை வாங்கியுள்ளனராம். ராஜேஷ் எஸ் ஜக்கி என்பவரிடம் இருந்து இந்த பங்களா வாங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.

பைத்தியமாக மாறி வெண்பா எடுத்த விபரீத முடிவு.. பாரதிகண்ணம்மா சீரியல் விருவிருப்பான கட்டம்!

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலால் பாரதிகண்ணம்மா சீரியலில் கடந்த ஐந்து நாட்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எட்டு வருடங்களாக பிரிந்து இருந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து வாழ்வது ...