சொக்கத்தங்கம் பட நடிகை இந்த மூத்த நடிகையின் மகளா.. 80-களில் கொடி கட்டி பறந்தவங்காள ஆச்சே

எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சுமித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

மேலும் நடிகை சுமித்ரா தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்டோர் உடன் ஜோடி சேர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த நடிகை சுமித்ரா, ஒருகட்டத்தில் அவர்களுக்கே அம்மாவாகவும் நடிக்க தொடங்கிவிட்டார்.

அதன் பிறகு இயக்குனர் ராஜேந்திர பாபு என்பவரை திருமணம் செய்துகொண்ட சுமித்ராவிற்கு 2 மகள்கள் உள்ளனர். முத்த மகள் உமா, தமிழ் சினிமாவில் சொக்கத்தங்கம், தென்றல் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் தான்.

ஆனால் இரண்டாவது மகள் நக்சத்ரா திரைத்துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறியாத உண்மை, ஏனென்றால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நக்சத்ரா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மருத வேலு, ஆர்யா, சூர்யா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ள நக்சத்ராவிற்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உண்டு. சுமித்ரா போலவே அவருடைய இரு மகள்களும் திரைத்துறையில் தங்களுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.