சைக்கோ உடன் இணையும் SJ சூர்யா.. ஒருத்தரே பூமி தாங்காது இதுல ரெண்டு பேரா

கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக வலம் வருபவர் தான் எஸ்.ஜே.சூர்யா. இவர் இயக்குனராக இருந்த போது விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கி பல வெற்றி படங்களை வழங்கியுள்ளார். ஆனால் சமீபகாலமாக எஸ்.ஜே.சூர்யா படங்களை இயக்குவதை தவிர்த்து நடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான நெஞ்சம் மறப்பதில்லை படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலரது பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கி இருந்தார்.

இந்நிலையில் தற்போது எஸ்.ஜே.சூர்யா மீண்டும் ஒரு பிரபல இயக்குனருடன் கைகோர்த்துள்ளார். அவர் வேறு யாருமல்ல தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகள் மூலம் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருக்கும் இயக்குனர் மிஷ்கின் தான். மிஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார்.

ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தை முருகானந்தம் தயாரித்துள்ளார்.

இப்படத்தை முடித்த பின்னர் மிஷ்கின் இயக்க உள்ள புதிய படத்தில் தான் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளார். இவருடன் நடிகர் விதார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். பிசாசு 2 படத்தில் இயக்குனர் மிஷ்கினின் திறமையை பார்த்து வியந்த தயாரிப்பாளர் முருகானந்தமே இந்த படத்தையும் தயாரிக்க முன்வந்துள்ளாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தாவை கதற கதற அழவைத்த சம்பவம்.. அவரே வெளியிட்ட உருக்கமான பதிவு

திருமணம், விவாகரத்து, காதல் பிரிவு இவை அனைத்தும் சாதாரணமாக அனைவரது வாழ்விலும் நடக்கும் விஷயங்கள் தான். ஆனால் ஒரு நடிகையின் வாழ்வில் நடந்தால் மட்டும் ஏன் அதை மிகப்பெரிய பேசு பொருளாக மாற்றுகிறோம் என்பதுதான் ...