சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டும் சிம்பு.. மாஸாக இருந்தாலும் எங்கள நடுரோட்டில் விட்டுட்டாரு

சிம்புவின் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவருடைய அடுத்த படமாக வெந்து தணிந்த காடு மற்றும் பத்து தல போன்ற இரண்டு படங்களையும் சிம்புவின் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் ஓரளவு நிறைவடைந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதேபோன்று நெடுஞ்சாலை, ஜில்லுனு ஒரு காதல் போன்ற சூப்பர் ஹிட் படங்களின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் பத்து தல திரைப்படமானது கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘மஃப்டி’ திரைப்படத்தின் ரீமேக்காகும்.

எனவே ஒரிஜினல் வெர்ஷனை மையமாகக்கொண்டு இயக்குனர் கிருஷ்ணன் பத்து தல திரைப்படத்தை வித்தியாசமான கோலத்தில் படைக்க முனைப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இவ்வாறு சிம்பு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல திரைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு திடீரென்று பிக்பாஸில் சிம்பு என்ட்ரி கொடுத்திருப்பது கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

அத்துடன் பத்து தல படத்திற்கு கொஞ்சம் தாடி வளர்க்க வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் சிம்புவுக்கு கொஞ்ச நாள் கால அவகாசம் கொடுத்திருக்கும் இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விரைந்திருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அதுமட்டுமின்றி வெந்து தணிந்தது காடு படத்திற்காக இன்னும் 25 நாட்கள் படப்பிடிப்பு மீதமிருக்கும் நிலையில், சிம்பு எடுத்திருக்கும் இந்த முடிவு இந்த இரண்டு படங்களையும் கடுமையாக பாதிக்கப் போகிறது.

சாதாரணமாகவே படப்பிடிப்புக்கு தாமதமாகவே வரும் சிம்புவை பிக்பாஸில் கமிட் ஆன பிற, மீண்டும் இந்த படப்பிடிப்புத் தளத்திற்கு வரவைக்க என்ன பாடு பட போகிறோமோ என படக்குழுவினர்கள் தலையைப் பிய்த்துக் கொள்கின்றனர்.