சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட விஜய், அஜித்.. ஒருவரால் தவறிப்போன ஹிட் படம்

இயக்குனர் விக்ரமனயிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர் ராஜகுமாரன். நீ வருவாய் என படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் என தொடர்ந்து தேவயானியை கதாநாயகியாக வைத்து ராஜகுமாரன் படங்களை இயக்கினார்.

தொடர்ந்து பல படங்களில் இணைந்து பணியாற்றியதால் ராஜகுமாரன், தேவயானி இடையே காதல் ஏற்பட்ட திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ராஜகுமாரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திரை அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

ராஜகுமாரியின் முதல் படமான நீ வருவாய் என படத்தில் முதலில் அஜித்குமார் மற்றும் விஜய் இருவரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் விஜய் அப்போது ஏராளமான படங்களில் நடித்து வந்ததால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியவில்லை. அஜித்துக்கும் அப்போது கார் விபத்து ஏற்பட்டிருந்தது. ஆனால் கதை கேட்டவுடன் அஜித் ஓகே சொல்லிவிட்டார்.

அதன் பின்பு விஜய் கதாபாத்திரத்திற்கு பார்த்திபன் நடிக்க வைத்தார். தேவயானி நடிப்பதை பார்க்க வேண்டுமென அவரது அம்மா முதல் நாள் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததாக ராஜகுமாரன் தெரிவித்தார். அப்போது பார்த்திபனை பார்த்து நடிப்பதை தாண்டி வேறு எதுவும் செய்யக்கூடாது என தேவயானி அம்மா திட்டியுள்ளார்.

அதற்குகாரணம், இதற்கு முன்னதாக தேவயானி உடன் பார்த்திபன் சில படங்களில் நடித்துள்ளார். பார்த்திபன் இயக்குனர் என்பதால் அப்படத்தில் சில காட்சிகள், சில வசனங்களை கரக்ஷன் செய்வார். அதேபோல் நீ வருவாய் என படத்தில் நடித்த ரமேஷ் கண்ணா மற்றும் பார்த்திபன் இருவரும் இயக்குனர்கள். அந்த சமயத்தில் நீ வருவாய் என படத்தில் பார்த்திபன் நடித்துவிட்டு கேமராவை பார்த்து சில மாற்றங்களை கூறுவார் என பலரும் கூறியுள்ளனர்.

இதனைக் கேள்விப்பட்ட தேவயானி அம்மா பார்த்திபன்யிடம் நடிப்பதை தாண்டி எந்த கரக்ஷன் கூறக்கூடாது. சும்மா சும்மா ஒரே சீனில் நடிக்க கூடாது என கொஞ்சம் கோபமாக கூறியுள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் ராஜகுமாரன் கூறினார். ஆனால் பார்த்திபன் என்னுடைய இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்து அனைத்து காட்சிகளிலும் நடித்து கொடுத்து சென்றார் எனவும் ராஜகுமாரன் தெரிவித்தார்.