சேரன் இயக்கத்தில் நடிக்க இருந்த சரத்குமார்.. பல வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை.!

தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர் சரத்குமார். ஆனால் சினிமாவின் ஆரம்ப காலத்தில் இவரும் ரஜினி-கமல் போல் கதாநாயகனாக பல படங்களில் நடித்துள்ளார். ஒருகாலத்தில் இரட்டை கதாபாத்திரம் என்றாலே சரத்குமார் தான் அனைத்து இயக்குனர்களுக்கும் ஞாபகம் வருவார்கள். அந்த அளவிற்கு இரட்டை கதாபாத்திரத்தின் மூலம் பல படங்களை ஹிட் கொடுத்துள்ளார்.

சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று தனது நடிப்பினை தற்போது வரை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். வில்லனாகவும் முன்னணி நடிகர்களுக்கு அப்பாவாகவும், கலெக்டர் மற்றும் போலீஸ் என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

சரத்குமார் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார். அப்போது சரத்குமார் வைத்து படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்களும் போட்டி போட்டனர். அப்படி போட்டி போட்டவர்களில் சேரனும் ஒருவர் என சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார். மேலும் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சரத்குமார் இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை தான் சேரன் வைத்திருந்ததாகவும், இப்படத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு படத்தை இயக்குவதாக திட்டமிட்டிருந்தோம் ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தை இயக்க முடியாமல் போனது என தெரிவித்திருந்தார்.

மேலும் இப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரிக்க இருந்ததாகவும் கடைசி வரை எங்களால் அந்த படத்தை எடுப்பதற்கான சூழ்நிலை அமையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.