சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் கதை இதுதானாம்.. பரபரப்பாக வெளிவந்து லேட்டஸ்ட் அப்டேட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தமிழில் திருச்சிற்றம்பலம் மற்றும் மாறன் ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், இதனை அடுத்து தொடர்ச்சியாக நான்கு தெலுங்கு படங்களில் நடிக்க உள்ளார். அதில் ஒரு படத்தை தான் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார்.

தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனரான சேகர் கம்முலா தேசிய விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சேகர் கம்முலா இயக்த்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் புதிய படம் ஒன்றில் தான் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

தெலுங்கில் டாலர் ட்ரீம்ஸ், ஃபிடா, லீடர் உள்ளிட்ட படங்களை இயக்கிய சேகர் கம்முலா, முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதை வென்றார். தற்போது இவரது இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் தான் நாயகனாக நடிகர் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை நாராயணதாஸ் நரங் மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள், மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படம் குறித்து பேசிய இயக்குனர் சேகர் கம்முலா, “தனுஷை வைத்து நான் இயக்கும் படம் ஒரு த்ரில்லர் படமாக பல மொழிகளில் உருவாக உள்ளது. அடுத்தாண்டின் முதல் பாதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். மேலும் ராணாவுடன் விரைவில் ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளேன்” என கூறியுள்ளார்.

பட வாய்ப்பு இல்லாததால் அமலாபால் எடுத்த அதிரடி முடிவு.. வளைத்து போட்ட விஜய் டிவி

சினிமாவில் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்து விடும். இதனால் மார்க்கெட் இழந்த நடிகைகள் அக்கா, அம்மா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். சில ...