செல்வராகவனை விட்டுக்கொடுக்காத முதல் மனைவி.. அவர்கிட்ட பிடிச்சதே இதுதான்

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டும்தான் வித்தியாசமான கதைகளை வைத்து வெற்றிப்படங்களை கொடுப்பார்கள். இந்த வரிசையில் செல்வராகவன் பல வித்தியாசமான படைப்புகளை கொடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளிவந்தபோது பெரிய அளவில் வரவேற்பை பெறாவிட்டாலும் தற்போது இப்படத்தின் மீதான வரவேற்பு பாகுபலி விட அதிகமாகத்தான் உள்ளது. அதிலும் ஒரு சில ரசிகர்கள் பாகுபலி படத்தை கொண்டாடுவதை விட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை தான் கொண்டாட வேண்டும் என பலரும் கூறினர்.

சமீபத்தில் சோனியா அகர்வாலிடம் செல்வராகவனை பற்றிய பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதிலும் அவரது உழைப்பு பற்றி கேட்டனர். அதற்கு சோனியா அகர்வால் ஒரே வார்த்தையில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை பார்த்தாலே தெரியும் அவரது உழைப்பு என சூசகமாக கூறியிருந்தார்.

அந்தளவிற்கு செல்வராகவனின் படைப்பு ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. செல்வராகவன் தற்போது கீதாஞ்சலி என்பவருடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்து இருந்தார். அப்போது செல்வராகவனுக்கும் சோனியா அகர்வாலுக்கும் காதல் ஏற்பட்டது. பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் திருமணமாகிய ஒரு சில வருடங்களிலேயே இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்றனர். சமீபத்தில் செல்வராகவனை பற்றி சோனியா அகர்வால் வெளிப்படையாக பேசியுள்ளார். செல்வராகவன் மிகவும் கடுமையாக உழைக்க கூடியவர் எப்போதும் வேலையின் மீது அதிக கவனம் வைத்திருப்பார். இதுதான் அவரிடம் தனக்கு பிடித்த விஷயம் என கூறினார்.

மேலும் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளும்போது அவ்வளவு சந்தோசமாக இருந்தோம் இந்த சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என நினைத்தேன். ஆனால் குறுகிய காலத்திலேயே அந்த சந்தோசம் நிறைவடைந்ததாக கூறினார். மேலும் திருமணம் செய்து கொள்ளும்போது எவ்வளவு சந்தோசம் இருந்ததோ அதேபோல் பிரியும் போது மிகவும் கவலையாக இருந்ததாகவும் கூறினார்.

தற்போது படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருவதாகவும். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது ஒருசில பட வாய்ப்பை ஏற்று நடித்து வருவதாகவும் கூடிய விரைவில் இப்படங்கள் திரையரங்கில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.