செல்வராகவனை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் இணைந்த தனுஷ்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் விஜய் பொருத்தவரை புத்திசாலி என்று தான் கூற வேண்டும் அவர் மற்றவர்களைப் போல அனைத்து வெற்றி படங்களாக கொடுக்க வேண்டும் என்று நினைக்காமல் ஒரு தோல்வி ஒரு வெற்றி என தனது சினிமா பயணத்தில் வித்தியாசமான முறையில் கையாண்டு வருகிறார். உதாரணத்திற்கு கத்தி எனும் வெற்றி படத்தை கொடுத்த பிறகு புலி படத்தை கொடுத்தார்.

அதேபோல் தெறி எனும் வெற்றி படத்தை கொடுத்த பிறகு பைரவா எனும் தோல்வி படத்தை கொடுத்தார். அதற்குக் காரணம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைப்பது தான் என பலரும் கூறினர்.

ஆனால் மற்றவர்கள் பார்வையில் கதையை சரியாக தேர்வு செய்ய தெரியவில்லை என கூறி வந்தனர் ஆனால் அது உண்மையில்லை என சினிமா பிரமுகர்கள் பலரும் விஜயின் புத்திசாலித்தனத்தை வெளியே கூறினர். தற்போது பீஸ்ட் என்னும் படத்தில் நடித்து வருகிறார். நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருவதால் படத்தில் பெரும்பாலான காட்சிகள் பரவலாக பேசப்படும் என சினிமா பிரமுகர்கள் பலரும் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் படத்தில் கார் சேஸிங் காட்சிகள் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இப்படத்தில் வில்லனாக செல்வராகவன் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தனர்.

தற்போது அவரது தம்பியான தனுஷ் இப்படத்தில் விஜய்க்காக ஒரு பாடல் பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்பாடல் கண்டிப்பாக ஒரு பெரிய அளவில் வரவேற்பை பெறும் எனவும் கூறி வருகின்றனர். தீபாவளியன்று படம் வெளியாக காத்திருப்பதால் கூடிய விரைவிலேயே படத்தின் அப்டேட் ஆக ஒரு பாடல் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.