செல்வராகவனுக்கும் வித்யூலேகாவிற்கும் இப்படி ஒரு தொடர்பா.? ஆச்சரியத்தில் உறைந்து போன புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் தற்போது செல்வராகவன் படங்களை தாண்டி ஒரு சில படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார்.

செல்வராகவன் முதலில் சோனியா அகர்வாலை காதல் திருமணம் செய்துகொண்டார். பின்பு ஒரு சில வருடங்களில் பிரிந்து கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கீதாஞ்சலியின் நெருங்கிய உறவினர்களும் சினிமா துறையில்தான் இருந்துள்ளனர். ஆனால் அது  தெரியாமலேயே இருந்துள்ளது.

கதாசிரியராகவும், நடிகராகவும் பணியாற்றியவர் மோகன்ராம். இவர் ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். இவரது மகளான வித்யூலேகா இவரது அறிமுகத்துடன் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

வித்யூலேகாவிற்கு பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் சமீபத்தில் உடல் எடையை குறைத்து சினிமாவில் நடிப்பதற்காக ஆர்வம் செலுத்தி வந்தார். அதன் பிறகு இவர்கள் ஒரு சிலபடங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. ஆனால் தற்போது வித்யுலேகா அவரது நெருங்கிய காதலர் சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி வித்யூலேகாவிற்கு உறவினர் முறையில் பார்க்கும்போது அக்கா முறை எனக் கூறி வருகின்றனர். தற்போது இவர்கள் இருவரும் உறவினர் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது வீட்டில் அக்காவின் திருமணத்திற்கு கீதாஞ்சலியை உடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.