சின்னத்திரை சீரியல்களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவராக வலம் வருபவர் ஷபானா ஷாஜகான். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செம்பருத்தி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கும் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஆரியன் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென தன்னுடைய கல்யாண தினத்தன்று ஒரு வீடியோ மூலம் ஆரியன் மற்றும் ஷபானா இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஷபானா கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே மற்றொரு சின்னத்திரை ஜோடியான மதன் மற்றும் ரேஷ்மா இருவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றது.

அடிப்படையில் ஷபானா ஷாஜகான் ஒரு முஸ்லிம் என்பதால் இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது, அதுமட்டுமில்லாமல் ஷபானா வீட்டில் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்.

இதனால்தான் அவசர அவசரமாக ஆரியன் மற்றும் ஷபானா ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டதாக ஒரு வதந்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் திருமணம் நடந்தது உண்மைதான் என்பது தெரிந்ததே.

ஆனால் அது பெற்றோர்கள் இல்லாமல் நடக்க வில்லை எனவும் அந்தக் கல்யாணத்தில் ஷபாவின் தாயார் வந்து இருந்தார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்தது உண்மைதான் ஆனால் பிறகு இருவரும் சேர்ந்து ஷபானாவின் குடும்பத்தை சமாதானம் செய்து விட்டனர்.

எந்த ஒரு விஷயமும் முழுசாக தெரியாமல் இப்படி ஒரு செய்தியை பல பேர் பல வாக்கில் பேசிக்கொண்டிருப்பது புது தம்பதிகளான ஷபானா மற்றும் ஆரியன் இருவருக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளதாம். திருமணம் செய்த சந்தோசத்தை நினைத்து பார்ப்பதா அல்லது இது போன்ற வதந்திகளை நிறுத்துவதா என்ன செய்வது என்றே புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.