ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிரபலமான சீரியல்தான் செம்பருத்தி. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஷபானாவிற்கும், மாமியாராக நடிக்கும் பிரியா ராமனுக்கும் எக்கச்சக்க ரசிகர் கூட்டம் உண்டு. அதேபோல் இந்த சீரியலில் ஆதி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்த கார்த்திக்கு ஏராளமான ரசிகைகள் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக பார்வதி-ஆதி ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி வேற லெவல் இருக்கும். இந்த சீரியலை பார்க்கும் பொழுதே அவ்வளவு பரவசம் ஏற்படும். ஆனால் திடீரென்று செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் வெளியேறியதும் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அதன் பிறகு ஆதி என்ற கதாபாத்திரத்திற்கு பிரபல விஜே அக்னி என்பவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். தொடக்கத்தில் அக்னியின் நடிப்பை கேலி கிண்டலடித்த ரசிகர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கத் தொடங்கி விட்டனர்.

இருப்பினும் கார்த்திக் நடித்த அளவிற்கு அக்னியால் நடிக்க முடியவில்லை என்பதே பலரின் கருத்தாகும். இதனைப் புரிந்து கொண்ட அக்னி தற்போது தன்னுடைய நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொண்டிருக்கிறார். விரைவில் அவர் ரசிகர்களின் மனதை இடம் பிடிப்பார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் பழைய ஆதி அதாவது கார்த்திக்கை செம்பருத்தி சீரியலில் பார்க்கலாம். ஏனென்றால் செம்பருத்தி சீரியல் மீண்டும் தொடக்கத்திலிருந்து ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 9.30 மணி வரை செம்பருத்தி சீரியலின் பழைய எபிசோட் ஒளிபரப்பப்படுகிறது. ஏற்கனவே பார்த்த சீன்கள் என்றாலும் பழைய ஆதி-பார்வதி மீண்டும் திரையில் காண்பதற்கு அவர்களுடைய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.