சூர்யா படத்திற்கு வலைவிரித்த கோடீஸ்வர கம்பெனி.. கழுவுற மீனில் நழுவுற மீன்போல எஸ்கேப்

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். பிரம்மாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படமும் சூர்யாவுக்கு மாஸ் படமாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர். தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் பல தயாரிப்பாளர்களும் சூர்யாவை வைத்து படம் தயாரிக்க முன் வந்துள்ளனர்.

அதாவது பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா சூர்யாவிடம் ஒரு படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் சூர்யா தற்போது பல படங்களில் நடித்து வருவதால் இப்போதைக்கு உங்கள் தயாரிப்பில் படத்தில் நடிக்க முடியாது எனக் கூறியுள்ளார். தற்போது இந்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சூர்யா தற்போது சொந்த தயாரிப்பிலேயே பல படங்களை தயாரித்து வருவதால் மற்ற தயாரிப்பாளருக்கு வாய்ப்பு கொடுப்பதை தவிர்த்து தனது சொந்த தயாரிப்பிலேயே இனிமேல் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனால்தான் சூர்யா லைகா போன்ற பெரிய நிறுவனங்களின் படத்தில் நடிப்பதற்கு மறுத்துள்ளார் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

ஆனால் சூர்யாவிற்கு நெருக்கமாக இருப்பவர்கள் தற்போது அதிகமான படங்கள் சூர்யா நடித்து வருவதால் கால்ஷீட் கொடுத்துவிட்டு பின்பு படபிடிப்பு தாமதமானால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவே தற்போது வரை எந்த தயாரிப்பாளருக்கும் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளனர். மேலும் சூர்யா கமிட்டான படங்களில் நடித்து முடித்த பிறகு மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் படத்திற்கு சம்மதம் தெரிவிப்பார் எனவும் கூறியுள்ளனர்.