தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 50% பார்வையாளர்கள் அனுமதியுடன் திரையரங்கில் வெளியான டாக்டர் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்தது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

கோலமாவு கோகிலா என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் இயக்கத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரங்களில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த டாக்டர் படம் ரசிகர்களை முற்றிலும் கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும். படம் முடியும் வரை தியேட்டரில் சிரிப்பலைகள் அடங்கவே இல்லையாம்.

இந்த படம் மூலம் கோலிவுட்டில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எகிறி விட்டது. ஒரு இளம் நடிகருக்கு இந்த அளவிற்கு டிமாண்ட் இருப்பது இதுவே முதல் முறை. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டான் மற்றும் அயலான் படங்கள் தயாராக உள்ளன. இதுதவிர சிங்கப்பாதை என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் டாக்டர் படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் அவரது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை தன்னுடைய படத்திற்கு 20 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த சிவகார்த்திகேயன், தற்போது அதிரடியாக தனது சம்பளத்தை 30 கோடியாக உயர்த்தி விட்டாராம்.

டாக்டர் படத்திற்கு முன்பு வரை சாதாரண நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் இப்படத்தின் வெற்றியால் ஒரு மாஸ் நடிகராக மாறிவிட்டார் என்று தான் கூற வேண்டும். அதற்கு உதாரணமே அவரது சம்பள உயர்வு. சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு வந்து தற்போது இவர் படைத்துள்ள சாதனை மிகப்பெரிய சாதனையாகும். விட்ட மார்க்கெட்டை பிடித்து வரும் சூர்யாவின் சம்பளத்தை சிவகார்த்திகேயன் நெருங்கி விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.