சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு அமேசான் தளத்தில் நேரடியாக வெளியான திரைப்படம் ஜெய் பீம். இருளர் மக்களின் வாழ்க்கை வரலாறு ஒரு தம்பதிக்கு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது. இந்த படம் வெளியான பிறகு இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தன.

ஆரம்பத்தில் படமாக பார்க்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் தற்போது அரசியலாக மாறியுள்ளது அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதில் குறிப்பிட்ட ஜாதியினரை அடையாளப்படுத்தி சில குறியீடுகளை வைத்ததாகவும் அவர்களை தாக்கிப் பேச வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படம் எடுக்கப்பட்டதாகவும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடுப்பான சிலர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் தரப்போவதாக நேரடியாகவே பேட்டி கொடுப்பதை காண முடிந்தது. இந்த மாதிரி பிரச்சனைகள் வலித்துக் கொண்டே இருக்கும் நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் ரசிகர்கள் துணை நிற்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதைப்பார்த்த நடிகையும் அரசியல்வாதியுமான காயத்ரி ரகுராம் தன்னுடைய பக்கத்தில் சூர்யா ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் ஒன்றை வைத்து சூர்யாவை நாயுடன் ஒப்பிட்டு கூறியது போல் இருக்கும் அந்த புகைப்படம் சூர்யா ரசிகர்களை மிகவும் கோபப்படுத்தி உள்ளது.

நாய்கள் திருடனைப் பார்த்து குறைக்கும் அல்லது தீய சக்திகள் ஏதேனும் இருந்தால் அதை எச்சரிக்கும் வகையில் குறைக்கும். அது போல் தான் இருக்கிறது சூர்யா ரசிகர்கள் செய்த இந்த போஸ்டர். சூர்யா ரசிகர்கள் இதை தவறாக செய்து விட்டார்கள் என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார். இதன் உள்ளர்த்தம் புரிந்தவர்கள் பிஸ்தா.