சூர்யாவை சுத்தலில் விட்ட பாலா.. என்னன்னே, இப்படி பண்றீங்க என செம அப்செட்

சூர்யா அடுத்து வெற்றிமாறன் சிறுத்தை சிவா என தொடர்ந்து படங்கள் செய்வார் என பார்த்தால் திடீரென பாலாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போவதாக அறிவிப்பை வெளியிட்டது சூர்யா ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சிதான். இருந்தாலும் ஏற்கனவே நந்தா பிதாமகன் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் பாக்கி உள்ளதாம். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதைக்கு வெற்றிமாறன் கொஞ்சம் பிஸியாக இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிக்கொண்டே செல்கின்றன.

இதனால் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க போவதாக சூர்யா அறிவித்தார். அறிவித்த கையோடு படத்தை ஆரம்பிக்கலாம் என எதிர்பார்த்த நேரத்தில் தான் நம்ம பாலா வழக்கம்போல் சூர்யாவுக்கு சாட் கொடுத்துவிட்டார்.

ஒரு லைன் கதையை மட்டும் சொன்ன பாலா இன்னமும் மொத்த படத்தின் கதையை எழுதி முடிக்கவில்லையாம். அதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என டைம் கேட்கிறாராம். எல்லாம் ரெடியாக இருக்கும் என நம்பி அறிவிப்பை வெளியிட்ட சூர்யாவுக்கு இது கொஞ்சம் அப்டேட் தரும் விஷயமாக அமைந்துவிட்டது. இதனால் பாலாவிடம் என்ன அண்ணா உங்கள நம்பித்தான் அறிவிப்பை வெளியிட்டேன் இப்படி பண்ணிட்டீங்களே என ஆரம்பத்திலேயே சங்கடங்கள் நிகழ்ந்து விட்டதாம்.

இதனால் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தை முடித்துவிட்டு யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறோம் என்ற குழப்பத்தில் உள்ளாராம் சூர்யா. ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாதுரை படம் ரஜினிக்கு மிகவும் பிடித்து விட்டதால் அடுத்த படத்தையும் அவருக்குத் தர வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம். இதனால் தற்போது சூர்யா இயக்குனர் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறாராம்.