சூர்யாவுக்கே தெரியாமல் வளர்த்து விட்ட அஜித்.. தாறுமாறு ஹிட்டான அந்த 4 படங்கள்

சினிமா பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் தன்னுடைய திறமையால் சிறிது சிறிதாக முன்னேறி இன்று பிரபல நடிகர் என்ற அடையாளத்துடன் இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிக்க வந்த புதிதில் அவரின் திரைப்படங்கள் ஒன்றும் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

சில காலங்களுக்கு பிறகு சூர்யா மாஸ் ஹீரோ என்ற அடையாளத்தை பெற்றார். அதற்கு ஒரு வகையில் அவருடைய நடிப்பு திறமை காரணமாக இருந்தாலும் நடிகர் அஜித்தும் முக்கிய காரணமாக இருந்துள்ளார். ஏனென்றால் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படங்கள் அனைத்திலும் சூர்யாவுக்கு முன்னர் நடிக்க இருந்தது நடிகர் அஜித்.

ஆனால் அந்த சமயத்தில் நடிகர் அஜித் அந்த பட வாய்ப்பை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது. அவர் நடிப்பில் வெளியான அந்த திரைப்படங்கள் அனைத்தும் பயங்கர ஹிட் ஆனது. ஒருவகையில் சூர்யாவை அஜித் அவருக்குத் தெரியாமலே வளர்த்து விட்டார். அந்த படங்கள் என்ன என்பதை இப்போது காண்போம்.

நந்தா: பாலா இயக்கத்தில் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சூர்யாவுக்கு மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. நீண்ட காலமாக தோல்வி படங்களை கொடுத்து வந்த சூர்யாவுக்கு இந்த நந்தா திரைப்படம்தான் ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு முன்னர் நடிக்க இருந்தது நடிகர் அஜித்.

கஜினி: ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்ற குறைபாட்டினால் பாதிக்கப்படும் இளைஞராக சூர்யா இந்தப் படத்தில் நடித்திருப்பார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் அஜித் நடிக்க மறுத்ததால் அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது.

காக்க காக்க: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்த இந்த திரைப்படம் சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த படத்திற்கு பின்னர்தான் சூர்யா ஆக்ஷன் ஹீரோவாக பல திரைப்படங்களில் மாஸ் காட்டினார். இதற்கு ஒரு வகையில் நடிகர் அஜித்தும் காரணமாக அமைந்து விட்டார்.

நேருக்கு நேர்: இயக்குனர் வசந்த் இயக்கிய இந்தப் படத்தில் விஜய், சூர்யா இணைந்து நடித்து இருந்தனர். ஏற்கனவே நடிகர் விஜய் உடன் இணைந்த ஒரு திரைப்படத்தில் நடித்திருந்த அஜித் இதில் நடிக்க மறுத்த காரணத்தினால் சூர்யா அந்த கேரக்டரில் நடித்தார். சொல்லப்போனால் சூர்யா அறிமுகமான திரைப்படமும் இதுதான். ஒருவகையில் நடிகர் அஜித் அவருக்கே தெரியாமல் சூர்யா திரையுலகில் என்ட்ரி கொடுப்பதற்கு காரணமாக அமைந்து விட்டார்.