சூர்யா மற்றும் ஹரி கூட்டணியில் உருவான அனைத்து படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக சூர்யாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக்கொடுத்த திரைப்படங்களில் சிங்கம் படமும் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்குப் பிறகு இவர்களுக்குள் இருக்கும் நட்பை பார்த்து சினிமா வட்டாரத்தில் பலரும் பொறாமை பட்டனர் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தொடர்ந்து சூர்யாவை வைத்து ஹரி பல படங்களில் பணியாற்றினார்.

ஆனால் தற்போது இவர்களுக்குள் இருந்த நட்பில் ஒரு விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. அதாவது சூர்யாவிடம் ஹரி ஒரு கதையை பற்றி கூறியுள்ளார். அதற்கு சூர்யா இப்படத்தின் கதை எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். தற்போது அதே கதையை வைத்து ஹரி அவரது மச்சான் அருண் விஜய் வைத்து யானை எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதே நாள் அருண் விஜய்யை வைத்து இயக்கிய யானை படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சூர்யாவுடன் ஹரி மோதுவதற்கு காரணம் தான் கதை சொல்லி அது உங்களுக்கு பிடிக்கவில்லை என கூறி விட்டீர்களே கூறிவிட்டீர்கள். ஆனால் அதே கதையை வைத்து எப்படி ஹிட் கொடுக்கிறேன் என்பதை பாருங்கள் என்பதற்காகவே ஹரி சூர்யாவுடன் மோதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.