சூர்யாவுக்கு ஜோடியாகும் 70-களின் கனவுகன்னி.. அட இவங்க எம்ஜிஆர் காலத்து நடிகையாச்சே

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் தங்களது பாராட்டுக்களை சூர்யாவிற்கு தெரிவித்து வருகிறார்கள். தற்போது ஜெய் பீம் படம் ஐஎம்டிபி இணையத்தில் புதிய மைல்கல்லை எட்டி உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

அண்மையில் சூர்யா நடித்து வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தைப் போல் ஜெய்பீம் படமும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது. தற்போது சூர்யா, பாண்டியராஜன் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் நிறைவடைந்ததாக பாண்டியராஜன் அறிவித்திருந்தார். இப்படத்தில் எடிட்டிங் மற்றும் டப்பிங் இறுதிகட்டப் பணிகள் முடிந்தவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இயக்குனர் பாலா மற்றும் சிறுத்தை சிவா இயக்க உள்ள இரண்டு படங்களில் சூர்யா நடிக்க உள்ளார். பாலா இயக்கும் படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஆரம்ப கட்ட வேலை முழுவீச்சில் நடைபெறுகிறது. பாலாவின் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 70 களின் கனவுக்கன்னி நடிக்க உள்ளார். பழம்பெரும் பாலிவுட் நடிகை ஹேமமாலினி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹேமா மாலினி இது சத்தியம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கமலின் கதாநாயகியாக ஹேராம் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். 70-களில் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக ஹேமமாலினி இருந்தார். இவர் சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்துள்ளார்.

தற்போது ஹேமா மாலினி பாரதிய ஜனதா கட்சியில் எம்பியாக உள்ளார். பாலிவுட்டில் மிகவும் பிஸியாக இருந்த ஹேமமாலினி, இது சத்தியம் படத்திற்கு பிறகு தமிழில் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. கமல் வற்புறுத்தி அழைத்ததால் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்குப் பிறகு ஹேராம் படத்தில் நடித்தார். தற்போது பாலா மீண்டும் ஹேமமாலினியை தமிழில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

இப்படத்தில் நடிக்க ஹேமமாலினி சம்மதித்தால் அவரது கதாபாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஹேமமாலினி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஒருவேளை சூர்யா வயதான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்றும் அவருக்கு ஜோடியாக ஹேமாமாலினி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாக மாறிய 5 நடிகர்கள்.. எம்ஜிஆர், சிவாஜிக்குப் நிரந்தர வில்லன் இவர்தான்

சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி அதன் பிறகு பெரிய உயரத்தை அடைந்த ஹீரோக்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஹீரோக்களாக அறிமுகமான சில நடிகர்கள் வில்லனாக நடித்த அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறு ஹீரோவை விட வில்லனாக ...