தமிழ் சினிமாவில் கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்த நடிகர் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேல் சூரஜ் தயாரிப்பில் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.  தலை நகர் படத்திற்காக வடிவேலு முதலில் இயக்குநர் சுராஜுடன் இணைந்தார். மேலும் படத்தில் அவரது நகைச்சுவை கதாபாத்திரமான ‘நாய் சேகர்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

எனவே படத்தின் தலைப்பாக கதாபாத்திரத்தின் பெயரை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்த தலைப்பு ஏற்கனவே ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டிருந்ததால், ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’  என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது உள்ள இளம் நடிகர்கள், வைகைப்புயல் வடிவேலுவுடன் சேர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகர் வைகைப்புயல் வடிவேலுடன் சேர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்.

பொதுவாக சூரி மற்றும் சதீஷ் இருவரும் தான் சிவகார்த்திகேயன் படத்தில் நகைச்சுவை நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது அவர்களை கழட்டிவிட்டு வடிவேலு நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

எனவே சிவகார்த்திகேயன் மற்றும் வைகைப்புயல் வடிவேலுவின் கூட்டணியில் புதிய படத்திற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

மேலும் நடிகர் வடிவேலுவின் ரசிகர்கள் இவரது  ரீஎன்ட்ரி படத்தை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.