சூப்பர் ஹிட் படத்தை வாரிக் கொடுத்த பாரதிராஜா.. கமலால் கடுப்பான ரஜினி

ஒருமுறை இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அந்த விழாவிற்கு வந்திருந்த பாரதிராஜா மற்றும் ரஜினி இருவருக்கு இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டு அது சண்டையில் முடிந்துள்ளது.

இந்த விஷயத்தை நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் தற்போது தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது இளையராஜாவின் பிறந்த நாள் விழாவில் ரஜினி, பாரதிராஜா, கங்கை அமரன், பாஸ்கர், கதையாசிரியர் பஞ்சு அருணாசலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டோம்.

அப்போது பாரதிராஜா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் தங்களுக்குள் விவாதம் செய்து ஒருவரை ஒருவர் குறை கூறி பேசிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் பாரதிராஜா சிவப்பு ரோஜாக்கள் என்ற திரைப்படத்தை கமலை வைத்து எடுத்து இருந்தார்.

கமலின் வித்தியாசமான நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்தப் படத்தின் கதையை பாரதிராஜா முதலில் ரஜினிக்குத்தான் கூறியிருக்கிறார். அவருக்கும் கதை பிடித்துப்போக இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை பாரதிராஜா ரஜினியிடம் ஒரு வார்த்தை கூடக் கூறாமல் கமலை வைத்து அந்த படத்தை எடுத்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி பாரதிராஜாவின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

அந்த கோபத்தை தான் இளையராஜாவின் பிறந்த நாள் விழாவில் பாரதிராஜாவை பார்த்த போது அவரின் மீது ரஜினி காட்டியிருக்கிறார். பாரதிராஜா இதை அப்பவே ரஜினியிடம் கூறி சமாதானம் செய்து இருந்தால் ரஜினியும் அதை பெரிதுபடுத்தி இருக்க மாட்டார். அதனால் தான் இந்த பிரச்சனை இவ்வளவு பூதாகரமாக வெடித்ததாக சித்ரா லட்சுமணன் குறிப்பிட்டுள்ளார்.