சூப்பர் ஹிட் படத்தை நிராகரித்த சூர்யா.. லாவகமாக பயன்படுத்திக்கொண்ட அஜித்

ஆரம்ப காலங்களில் சூர்யாவுக்கு படங்களில் நடிக்க தெரியாது என பல விமர்சனங்கள் வந்தது. அது மட்டுமன்றி உயரம் கம்மி, நடனமாட தெரியாது என விமர்சனங்கள் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் சிவக்குமாரின் மகன் என்பதால் சினிமாவில் சுலபமாக நுழைந்து விட்டார் என பலரும் கூறிவந்தனர்.

அதேபோல் சூர்யா ஆரம்பத்தில் நடித்த படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை. அதன்பின்பு நடிப்பை முழுவதுமாக கற்றுக்கொண்டு தனது திறமையை காண்பிக்க ஆரம்பித்தார். மேலும் அவரின் திறமையை பறைசாற்றும் விதமாக பாலா இயக்கத்தில் வெளியான நந்தா படம் அமைந்திருந்தது.

இதைத்தொடர்ந்து சூர்யாவுக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்ததினால் தற்போது மாஸ் நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோருக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை சூர்யாவும் பெற்றுள்ளார். ஆனால் சூர்யாவின் ஆரம்ப காலங்கள் ஒரு வெற்றிப் படத்தை தவறவிட்டுள்ளார்.

அதாவது வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை படத்தில் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தார். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அப்போது சூர்யா இந்த படத்தை நிராகரித்துவிட்டார். அதன் பின்புதான் அஜித்துக்கு ஆசை படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

மேலும் வசந்தின் அடுத்த படமான நேருக்கு நேர் படத்தில் சூர்யா நடித்திருந்தார். இப்படத்தில் கதாநாயகனாக விஜய்யும் நடித்திருந்தார். நேருக்கு நேர் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமன்றி ஆரம்பத்தில் நடிக்க தெரியாது என முத்திரை குத்தப்பட்ட சூர்யாவுக்கு அண்மையில் தேசிய விருதும் கிடைத்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தில் மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சூர்யாவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. சூர்யாவின் வளர்ச்சியை பார்த்து தற்போது கோலிவுட் சினிமாவே வாய்பிளந்து பார்க்கும்படி அமைந்துள்ளது.

தன்னை தாக்கி பேசியவருக்கு கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்த ரஜினி.. அந்த மனசு இருக்கே சார்.!

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம்வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் ...