
திரையுலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களும் பயங்கர ஹிட் கொடுத்தது. இவருடைய படங்கள் என்றால் ரசிகர்கள் திருவிழா போலவே கொண்டாடுவதுண்டு.
இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தர்பார் அதைத்தொடர்ந்து இவருடைய அண்ணாத்த படத்திற்காக அவருடைய ரசிகர்கள் வெறிகொண்டு காத்துள்ளனர். இன்னிலையில் தர்பார் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தனது கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
அவர் திரையுலகில் நுழைந்த போது அவரை ஒரு தயாரிப்பாளர் திட்டி அவமானப்படுத்தி, அந்த படத்தின் அட்வான்ஸ் கூட கொடுக்காமல், அவரை துரத்தி விட்டதாகவும், அந்த கோபத்தில் தான், கோடம்பாக்கம் ரோட்டில் வெளிநாட்டுக்காரில் திமிராக கால் மேல் கால் போட்டு செல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தில் ரஜினி இருந்தாராம்.
அதன் பிறகு இத்தாலி காரை ஒன்று வாங்கி, எந்த தயாரிப்பாளர் அவமானப்படுத்தினாரோ அதே தயாரிப்பாளர் முன் திமிராக சிகரெட் பிடித்தாராம். ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் காலம் நேரமெல்லாம் கைகூட வேண்டும் என்றும் சூப்பர் ஸ்டார் அந்த மேடையில் தெரிவித்துள்ளார்.
அதன் பின், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ரசிகர்கள் யார் அந்த தயாரிப்பாளர் என்று தொடர்ந்து கேட்டு வந்தனர். அந்த தயாரிப்பாளர் யார் என்பதை, அதே படத்தின் இயக்குனரான காரைக்குடி நாராயணன் பத்திரிக்கையாளர்கள் பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.