சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்காத கதாநாயகிகள்.. அவங்க அழகுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு

ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என எல்லா நடிகைகளின் ஆசையாக இருக்கும். ஆனால் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்காத நடிகைகளை யார் என்று பார்க்கலாம். அவர்களில் சிலர் தற்போது வரை களத்தில் உள்ளார்கள் என்பதை ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  வயதானாலும் ஸ்டைலில் பட்டையைக் கிளப்பும்  சூப்பர் ஸ்டாருக்கு எப்பொழுதுமே மவுசு குறையாது.

கஸ்தூரி: கஸ்தூரி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மிஸ் மெட்ராஸ் என்ற பட்டத்தை 1992இல் பெற்றுள்ளார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் ரஜினியின் படத்தில் நடித்ததில்லை.

சுகன்யா: லேடி கமலஹாசன் என்றழைக்கப்படும் சுகன்யா நடிகர் விஜயகாந்த், சத்யராஜ்,கமலஹாசன் பிரபு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் ஒரு படத்தில் கூட இவர் நடித்ததில்லை.

ரஞ்சிதா: பாரதிராஜா இயக்கிய நாடோடி தென்றல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ரஞ்சிதா. இவர் விஜயகாந்த், சரத்குமார், அர்ஜூன், பிரபு, கார்த்திக், சத்யராஜ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் ரஜினியுடன் நடிக்க ஒரு பட வாய்ப்பு கூட இவருக்கு கிடைக்கவில்லை.

சரண்யா பொன்வண்ணன்: மணிரத்தினம் இயக்கிய நாயகன் படத்தின் மூலம் சரண்யா பொன்வண்ணன் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்த இவர் தற்போது பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். நெப்போலியன், மம்மூட்டி, கார்த்திக், கமலஹாசன், ராஜ்கிரண் ஆகிய கதாநாயகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் உடன் சேர்ந்து நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

தேவயானி: சுஷ்மா என்ற பெயரை சினிமாவிற்காக தேவயானி என்று மாற்றிக்கொண்டார். குடும்பப்பாங்கான படத்தில் எதார்த்தமாக நடித்து இருப்பார் தேவயானி. சரத்குமார், சத்தியராஜ், முரளி, பார்த்திபன், மம்மூட்டி, நெப்போலியன், முரளி, பிரசாந்த்,விக்ரம், கமலஹாசன், விஜய், அஜித் என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த தேவயானி ரஜினியுடன் சேர்ந்து எந்த படமும் நடிக்கவில்லை.