சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விக்ரம்.. அதுக்குனு இப்படி பண்ணிட்டீங்களே!

சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக ஒரு அந்தஸ்தை பெற்ற விக்ரம் அதன்பிறகு கமர்சியல் ஹீரோவாக மாறி பல வெற்றி படங்களை கொடுத்து வந்தார். உழைக்கும் அளவுக்கு அவருக்கு வெற்றி கிடைப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

உயிரைக் கொடுத்து அவர் பணியாற்றிய ஐ படம் கூட அவர் காலை வாரிவிட்டது. இப்படி திரும்பிய பக்கமெல்லாம் தோல்வியின் முகத்தில் இருந்த விக்ரமுக்கு சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியான மகான் திரைப்படம் ஒரு நல்ல கம்பாக் படமாக அமைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் விக்ரம் அதே சமயத்தில் தெலுங்கு சினிமாவில் உள்ள சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹீரோவாக கேரியர் நன்றாக சென்று கொண்டு இருக்கும் போது எதற்கு வில்லன் வேஷம். ஒருவேளை பட வாய்ப்பு இல்லாததால் கேரியர் முடியும் சமயத்தில் வில்லனாக நடிக்கலாம் என முடிவு செய்துவிட்டாரா எனவும் கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் வெளியான மகான் படத்தில் கூட சீயான் விக்ரமின் கேரக்டரை விட அவரது மகன் துருவ் விக்ரம் கேரக்டர் சிறப்பாக அமைந்து அனைவரையும் கவர்ந்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

இருந்தாலும் சியான் விக்ரம் ரசிகர்கள் இதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விக்ரம் வயதில் இருக்கும் நடிகர்கள் இன்னமும் டாப் நடிகர்களாக கலக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் வில்லனாக விக்ரம் தன்னுடைய பெயரை மாற்றினால் அது அவரது ஹீரோ வேஷத்திற்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிடும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.