சூப்பர் ஸ்டாருக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்.. அஜித் பார்முலாவை கையில் எடுக்கும் தளபதி

பேட்ட, விஸ்வாசம் போட்டி போட்டு வெளிவந்து வெற்றி பெற்றதை போல் விஜய் ரஜினியுடன் பெரிதாக போட்டி போட்டு வெற்றி பெற முடியவில்லை. இதுவே தளபதிக்கு ஒரு வருத்தமாக இருந்தது. ஆனால் அதற்கு பழிதீர்க்க இந்தமுறை வாய்ப்பை சரியாக பயன்படுத்த போகிறார் இளைய தளபதி விஜய்.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அண்ணாத்த திரைப்படம் முதலில் பொங்கல் அன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் இப்பொழுது அதற்குத்தான் சிக்கல் வந்துள்ளது. விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தளபதி விஜய் என்ன நினைத்தாரோ திடீரென தனது முடிவை மாற்றிவிட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் என்னுடைய படம் தான் பொங்கலன்று வெளியாக வேண்டும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதனால் வேறுவழியின்றி சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்திடம் இந்த சம்பவத்தைப் பற்றிக் கூறியுள்ளனர். அதற்கு ரஜினிகாந்த் ஒன்னும் பிரச்சினை இல்லை எனவும், தற்போது தன்னுடைய படம் தீபாவளி அன்று வெளியானால் என்னென்ன பிரச்சினைகள் சந்திக்கும் என கேட்டுள்ளார். அதற்கு தயாரிப்பு நிறுவனம் பொங்கலன்று வெளியானால் அனைத்து இடங்களிலும் திரையரங்குகள் திறந்துவிடும் அதனால் லாபம் பெரிதளவு கிடைக்கும்.

ஆனால் தீபாவளியன்று படத்தை வெளியிட்டால் கேரளா உட்பட ஒரு சில மாநிலங்களில் அண்ணாத்த திரைப்படத்தின் வசூல் பாதிக்கும் என கூறியுள்ளனர். அதற்கு ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தால் உங்களுக்கு பிரச்சனை வேண்டாம் உங்கள் இஷ்டப்படி படத்தை தீபாவளியன்று வெளியிடுங்கள் என கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நினைப்பது ஒன்றுதான் ‘வசூல் பெரிய அளவில் வந்தால் சந்தோஷம், வசூல் வரவில்லை என்றால் ஒன்னும் பிரச்சனை இல்லை அடுத்த படத்தையும் உங்களுக்கு கொடுத்து விடுகிறேன்’ என்பதை நாசுக்காக கூறியதாக சினிமா பிரபலங்கள் கூறிவருகின்றனர்.

நடிகர் விஜய்யால்தான் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியும், வசூலும் பாதிப்பதாக கூறி வருகின்றனர். அஜித்துடன் போட்டி போட்ட காலம் போய் இப்ப நேரா சூப்பர் ஸ்டார் கூடவும் போட்டி போட ஆரம்பித்து விட்டார் விஜய். ரஜினி மட்டும் சும்மா விடுவாரா எதுனாலும் ஓகே என அவரும் தயாராகத்தான் இருக்கிறார்.

பருத்திவீரன் படத்திற்கு இத்தனை கிளைமாக்ஸ் காட்சிகளா.? ரகசியத்தை போட்டு உடைத்த அமீர்

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் அமீர். இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதனை அடுத்து அமீர் இயக்கத்தில் ...