தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளிவந்த தர்பார் படம் பல இடங்களில் பலருக்கு வெற்றி . எனவே அடுத்த படம் நிச்சயம் அனைவருக்கும் வெற்றிப்படமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது முதன் முறையாக இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் ரஜினி அண்ணாத்த படத்தில் கூட்டணி அமைத்துள்ளார்.

முதன்முறையாக ரஜினியுடன், சிறுத்தை சிவா கூட்டணி அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அண்ணாத்த படத்தை வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியையொட்டி உலகளவில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தற்போது சிறுத்தை சிவா அண்ணாத்த படம் இயக்குவதற்காக ஏற்கனவே சூர்யா உடன் கமிட்டான படத்தை தள்ளி போட்டுள்ளார். தற்போது அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினி மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் மற்றொரு படம் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

ஆனால் சூர்யாவின் படத்தை முடித்த பிறகுதான் ரஜினியின் படத்தை இயக்க வேண்டும் என சிவா முடிவெடுத்துள்ளார். ஏனென்றால் அண்ணாத்த படத்திற்காக சூர்யாவின் படத்தை தள்ளிப் போட்டதால் மீண்டும் அவ்வாறு செய்வது நாகரீகம் இல்லை என்று சிறுத்தை சிவா இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.

எனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்கப்பட உள்ளது. அதேபோல் சூர்யாவும் இயக்குநர் பாலாவின் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளார். சிறுத்தை சிவா, பாலா என இருவரது படத்திலும் மாறி மாறி நடிப்பதற்கு சூர்யா தேதி ஒதுக்கி உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனவே அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினி மீண்டும் சிறுத்தை சிவாவுடன் மற்றொரு படத்திலும் பட்டையைக் கிளப்பப் போகிறார் என்ற செய்தியை அறிந்த ரசிகர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.