சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்று.. சிறப்பு விருந்தினராக கலக்கும் இளம் இசைப்புயல்!

விஜய் தொலைக்காட்சியில் பலவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கே ரசிகர் பட்டாளம் அதிகம். இன்று இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்ட சுற்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி மட்டும் 6 மணிநேரம் நடக்க உள்ளதாம்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் சீசன் 8 ன் டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இன்று நடக்கவிருக்கும் இந்த இறுதிச்சுற்றில் மானசி, முத்து சிற்பி, பரத், அபிலாஷ், ஸ்ரீதர் சேனா, அனு ஆகிய ஆறு போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்கு முன் நடந்த ப்ரீ  பைனல் சுற்றில் பிரபல நடிகரும்,  இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி சிறப்பு விருந்தினராக வருகை தந்து நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இன்று இறுதிச்சுற்று நடைபெற உள்ளது. இந்த சுற்றில் அனுராதா ஸ்ரீராம், எஸ்பிபி சரண், உன்னிகிருஷ்ணன் மற்றும் பென்னி தயாள் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

மேலும் ஆனந்த் வைத்தியநாதன், மால்குடி சுபா, கல்பனா, சித்ரா உள்ளிட பலரும் சிறப்பு நடுவர்களாக கலந்து கொள்கின்றனர். இன்றைய சிறப்பு விருந்தினராக பிரபல  இளம் இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் கலந்து கொள்கிறார்.

சூப்பர் சிங்கர் சீசன் 8ன் இன்று நடக்கவிருக்கும் இந்த இறுதி சுற்றில் வெற்றி பெறும் அந்த வெற்றியாளருக்கு அனிருத் பட்டத்தை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்து வருகின்றனர்.

அதிலும் விஜய் தொலைக்காட்சியின் இன்றைய டிஆர்பி பயங்கரமாக எகிறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூப்பர் சிங்கர் சீசன் 8 இன் டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.