சூடு பிடிக்கும் பிக்பாஸ் அல்டிமேட்.. இந்த வாரம் சிம்பு துரத்தி விட போகும் அந்த நபர்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன் நடிகை ரம்யா பாண்டியன் இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ளதால் சுவாரஸ்யம் இன்னும் கூடுதலாக இருக்கிறது.

கமல்ஹாசனுக்கு பிறகு நடிகர் சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அவர் போட்டியாளர்களுடன் மிகவும் கலகலப்பாக பேசி நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்குகிறார்.

இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் நபர் யார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் கசிந்துள்ளது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியை விட்டு தாடி பாலாஜி வெளியேறினார். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் பாலாஜி முருகதாஸ், சுருதி, ஜூலி, சினேகன் ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இதில் பாலாஜி மிகவும் சுவாரசியமான போட்டியாளராக வீட்டில் அனைத்து டாஸ்க்குகளிலும் பங்கு பெறுகிறார். அவரைத் தொடர்ந்து ஜூலி இந்த விளையாட்டை மிகவும் ஸ்போட்டிவாக எடுத்துக் கொண்டு ஜாலியாக விளையாடி வருகிறார். சில சமயங்களில் அவர் சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் அவருக்கு கணிசமான வாக்குகள் கிடைத்திருக்கிறது.

இதையடுத்து கடைசி இரண்டு இடத்தில் சினேகன் மற்றும் சுருதி ஆகிய இருவரும் இருக்கின்றனர். இவர்கள் இருவரை வைத்து பார்க்கும்பொழுது ஸ்ருதி நிகழ்ச்சியில் மிகவும் சுவாரஸ்யம் குறைந்த போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் கூட அவரை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு ஆடியன்ஸ் என்றும், இதுக்கு நீங்க வெளியவே இருக்கலாம் என்றும் கலாய்த்து வருகின்றனர். இதனால் அவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் கடைசி நேரத்தில் இந்த நிலை மாறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.