தமிழ் சினிமாவில் 14 இயக்குனர்களை கொண்டு 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் சுயம்வரம். இப்படம் கின்னஸ் சாதனையில் இடம் பெற்றது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் இப்படத்திற்கு முன்னதாகவே எம்ஜிஆரின் படம் 18 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

எம் ஏ திருமுகம் இயக்கத்தில் 1968 ல் எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் வெளியான திரைப்படம் தேர்த்திருவிழா. இப்படத்தை தேவர் பிலிம்ஸ் எம் எம் ஏ சின்னப்பா தேவர் தயாரித்திருந்தார். தேவர் பிலிம்சின் 14வது கருப்பு வெள்ளை திரைப்படம் தேர் திருவிழா. இப்படம் 18 மணி நேரத்திலே எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வர மற்ற நடிகர்களின் படம் முதல் ரவுண்டில் வருவது மட்டுமே வசூலாக இருக்கும். ஆனால் எம்ஜிஆர் படம் என்றால் எப்போதுமே நல்ல வசூலை தரும். இதனால் எம்ஜிஆர் காலத்திற்குப் பிறகு தேவர் பிலிம்ஸ் கடன் சுமையால் காணாமல் போனது.

எம்ஜிஆரின் ரகசிய போலீஸ் 115 திரைப்படம் ஜனவரி 11 வெளியானது. இதை தொடர்ந்து பிப்ரவரி 23 தேர்த்திருவிழா வெளியானது. இப்படத்திற்கு அடுத்த மூன்றே வாரத்தில் குடியிருந்த கோயில் படம் வெளியானது. குடியிருந்த கோயில் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

தேர்த்திருவிழா படம் சிறந்த பாடல்கள் அமைந்தும், சகல அம்சங்கள் நிறைந்து இருந்தும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. தேர்த்திருவிழா படப்பிடிப்பு கும்பகோணம் சுற்றி உள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டது. அப்போது கும்பகோணத்தில் மகாமகம் நடைபெற்றதால் திருவிழாவிற்கு எம்ஜிஆரை அழைத்தபோது அவர் மறுத்து விட்டாராம்.

எம்ஜிஆர் மகாமகத்திற்கு செல்ல ஆசை இருந்தாலும் திருவிழாவின் நோக்கம் மாறிவிடும் என கருதி அவர் போகாமல் பணம் கொடுத்து படக் குழுவினரை மகாமகத்திற்கு அனுப்பிவைத்தாராம்.