சுந்தர்.சி-க்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. வித்தியாசமாக முடிச்சு போட்ட இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் சுந்தர் சி தற்போது தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார்.

சுந்தர் சி அரண்மனை படத்தின் 3 பாகத்தை எடுத்து முடித்துள்ளார். தற்போது இப்படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் அரண்மனை 3 படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும் அரண்மனை 3 படத்தை முழுமையாக பார்த்த ஒரே ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தான் என சமீபத்தில் பேட்டியில் சுந்தர் சி கூறியிருந்தார்.

சுந்தர் சி ஒரு வெற்றி இயக்குனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் நடிகராக நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற்றதில்லை. இருந்தாலும் சுந்தர்சி தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது சுந்தர் சி வைத்து ஏற்கனவே வீராப்பு என்ற படத்தை இயக்கிய பத்ரிவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.

இப்படத்தில் சுந்தர் சிக்கு வில்லனாக ஜெய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முழுக்க முழுக்க ஆக்ஷன் மற்றும் த்ரில்லரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒரு வித்தியாசமான வில்லன் தேவை பட்டதாகவும் அதற்குச் ஜெய் தான் கரெக்டாக பொருந்துவார் எனவும் கூறியுள்ளனர். தற்போது சிவசிவ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஜெய் இப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் சுந்தரின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் வரவேற்பைப் பெறும் அதுவும் சுந்தர் சி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார். மேலும் இப்படத்தை கூடிய விரைவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

எண்ணை குளியலுடன் புகைப்படம் வெளியிட்ட பிரகதி.. இதெல்லாம் ஆண்டவனுக்கே அடுக்காது

விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் ஜூனியர், சீனியர் என சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியானது மாறி மாறி நடைபெறும். அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக ...