சுந்தர் சி இயக்கி 8 வெற்றி படங்கள்.. மனுஷன் கமல், ரஜினினு மாஸ் பண்ணியிருக்காரு

மணிவண்ணனின் உதவி இயக்குனராக இருந்த முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனரானார் சுந்தர் சி. பல படங்களை இயக்கி தலைநகரம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

முறைமாமன்: 1995ஆம் ஆண்டு வெளியான முறைமாமன் திரைப்படத்தில் ஜெயராமன்,குஷ்பூ, கவுண்டமணி,செந்தில், மனோரமா ஆகியோர் நடித்திருப்பார். இப்படம் முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும்.

உள்ளத்தை அள்ளித்தா: கார்த்திக் அவர்களை வைத்து இயக்கிய படங்கள் உள்ளத்தை அள்ளித்தா. இப்படத்தில் ரம்பா கவுண்டமணி,செந்தில் நடித்திருந்தார்கள்.

மேட்டுக்குடி: 1996 இல் வெளியான மேட்டுக்குடி திரைப்படத்தில் கார்த்திக், நக்மா,கவுண்டமணி, ஜெமினி கணேசன், மணிவண்ணன் என பலரும் நடித்திருந்தனர். இப் படம் திரையிட்ட பல திரையரங்குகளில் 75 நாள் தாண்டி வெற்றிப் படமாக ஓடியது.

அருணாச்சலம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி 1997 இல் வெளியான அருணாச்சலம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். இப்படத்தில் அருணாச்சலம் 30 நாளில் 300 கோடியை செலவு செய்தால் 3,000 கோடி கிடைக்கும்.

அன்பே சிவம்: உலக நாயகன் கமலஹாசன் மற்றும் மாதவன் ஆகியோரை வைத்து இயக்கிய படம் அன்பே சிவம் 2003இல் வெளியானது. முன் பின் தெரியாத மனுஷனுக்கு ஆக கண்ணீர் விடுற, அந்த மனசு இருக்கே,அதுதான் கடவுள்… இந்த வசனம் இன்றும் எல்லோராலும் பேசப்படுகிறது.

வின்னர்: வடிவேலு,பிரஷாந்த், கிரண்,விஜயகுமார்,எம் என் நம்பியார் ஆகியோர் நடித்த காமெடி திரைப்படம் வின்னர். இப்படத்தில் வடிவேலின் கைப்புள்ளை கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

கலகலப்பு: 2012 இன்னொரு காமெடி திரைப்படம்.சிவா,விமல் ஓவியா,அஞ்சலி ஆகியோர் நடித்த கலகலப்பு. இப்படம் நகைச்சுவையாக ஒரு மெஸ் மையப்படுத்தி எடுத்த படம்.

அரண்மனை: 2014இல் மாபெரும் வெற்றிபெற்ற படம். இப்படத்தில் சுந்தர் சி, ராய் லட்சுமி,வினய்,ஹன்சிகா, ஆண்ட்ரியா, கோவை சரளா,மனோபாலா நடிப்பில் உருவானது. அரண்மனை படம் நகைச்சுவையோடு கலந்த திகில் திரைப்படம்.