சுந்தர்.சி இயக்கத்தில் தாறுமாறாக ஓடிய 8 படங்கள்.. ரஜினி, கமலை வைத்தும் செம ஹிட்

மணிவண்ணனின் உதவி இயக்குனராக இருந்த முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனரானார் சுந்தர் சி. பல படங்களை இயக்கி தலைநகரம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

முறைமாமன்: 1995ஆம் ஆண்டு வெளியான முறைமாமன் திரைப்படத்தில் ஜெயராமன்,குஷ்பூ, கவுண்டமணி,செந்தில், மனோரமா ஆகியோர் நடித்திருப்பார். இப்படம் முழுக்க நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கும்.

உள்ளத்தை அள்ளித்தா: கார்த்திக் அவர்களை வைத்து இயக்கிய படங்கள் உள்ளத்தை அள்ளித்தா. இப்படத்தில் ரம்பா கவுண்டமணி, செந்தில் நடித்திருந்தார்கள்.

மேட்டுக்குடி: 1996 இல் வெளியான மேட்டுக்குடி திரைப்படத்தில் கார்த்திக், நக்மா,கவுண்டமணி, ஜெமினி கணேசன், மணிவண்ணன் என பலரும் நடித்திருந்தனர். இப் படம் திரையிட்ட பல திரையரங்குகளில் 75 நாள் தாண்டி வெற்றிப் படமாக ஓடியது.

அருணாச்சலம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கி 1997 இல் வெளியான அருணாச்சலம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம். இப்படத்தில் அருணாச்சலம் 30 நாளில் 300 கோடியை செலவு செய்தால் 3,000 கோடி கிடைக்கும்.

அன்பே சிவம்: உலக நாயகன் கமலஹாசன் மற்றும் மாதவன் ஆகியோரை வைத்து இயக்கிய படம் அன்பே சிவம் 2003இல் வெளியானது. முன் பின் தெரியாத மனுஷனுக்கு ஆக கண்ணீர் விடுற, அந்த மனசு இருக்கே,அதுதான் கடவுள். இந்த வசனம் இன்றும் எல்லோராலும் பேசப்படுகிறது. ஆனால் இந்த படம் மட்டும் சுமாராக ஓடியது.

வின்னர்: வடிவேலு, பிரஷாந்த், கிரண், விஜயகுமார், எம் என் நம்பியார் ஆகியோர் நடித்த காமெடி திரைப்படம் வின்னர். இப்படத்தில் வடிவேலின் கைப்புள்ளை கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

கலகலப்பு: 2012 இன்னொரு காமெடி திரைப்படம். சிவா, விமல், ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்த கலகலப்பு. இப்படம் நகைச்சுவையாக ஒரு மெஸ் மையப்படுத்தி எடுத்த படம்.

அரண்மனை: 2014இல் மாபெரும் வெற்றிபெற்ற படம். இப்படத்தில் சுந்தர் சி, ராய் லட்சுமி,வினய்,ஹன்சிகா, ஆண்ட்ரியா, கோவை சரளா, மனோபாலா நடிப்பில் உருவானது. அரண்மனை படம் நகைச்சுவையோடு கலந்த திகில் திரைப்படம்.

தேசிய விருதை கைப்பற்றிய 7 நடிகர்கள்.. 4 வயதில் ஜனாதிபதி விருது முலம் ஆரம்பித்த கமல்

கடந்த 68 வருடங்களாக சினிமாவில் சிறப்பாக நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தேசிய விருது வழங்கி கௌரவிக்கிறது. இதில் 7 தமிழ் நடிகர்கள் நேஷனல் அவார்டு கைப்பற்றி இருந்தாலும் இதுவரை ...